எலுமிச்சை பழத்தால் இத்தனை நன்மைகள் உள்ளதா ? ஆரோக்கிய தகவல் இதோ

புற்று நோய்களுக்கு எதிரான மருத்துவ சிகிச்சைகளில் சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன.

இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது.

தற்போதைய உலகில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே அவர்களின் வயதுக்கு மீறிய அதீத உடல் எடை பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு ஒரு தினமும் காலையில் இளம் சூடான நீரில், சிறிது எலுமிச்சம் பழ சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலின் வளர்சிதைமாற்றத்திறன் அதிகரித்து, தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.பற்கள் மற்றும் ஈறுகளில் சொத்தை மற்றும் கிருமிகளின் தாக்கத்தால் அவதிப்படுபவர்கள் இளம் சூடான நீரில் சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாய் கொப்பளித்து வருவதால் பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுபவர்கள், மது, சிகரெட் போன்ற போதைப் பொருட்கள் உபயோகிப்பவர்களுக்கு அவர்களின் கல்லீரல் அதிகமாக வேலை செய்வதோடு, அந்த உறுப்பில் அதிகளவு நச்சுக்கள் சேர்ந்து எதிர்காலங்களில் கடுமையான நோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.

இரண்டு நாட்களுக்கொரு முறை அல்லது குறைந்த பட்சம் வாரத்திற்கொரு முறை எலுமிச்சம் சாறு அருந்துபவர்களுக்கு கல்லீரலில் தங்கியிருக்கும் அத்தனை நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் தூய்மையாகும்.

தலைமுடியின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு எலுமிச்சம் பழம் பெருமளவில் உதவுகிறது. எலுமிச்சம் பழ சாற்றை எடுத்து தலையில் விட்டு தலைமுடியின் வேர்களில் ஊறுமளவிற்கு எலுமிச்சை சாற்றை நன்கு தடவ வேண்டும்.

சிறிது நேரம் ஊறவைத்து பின் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இந்த முறையில் வாரம் தோறும் செய்பவர்களுக்கு தலையில் இருக்கும் ஈறு, பொடுகு, பேன் ஆகியவற்றின் தொல்லைகள் நீங்குவதோடு முடி கொட்டும் பிரச்சினையும் தீரும்.

சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சம் பழ சாற்றை காலையில் அருந்தி வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி சிறுநீரக அறுவை சிகிச்சை நோய் ஏற்படாமல் செய்கிறது.