கேரளாவில் திருமணமான 10 மாதத்தில் பெண் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இதற்கான காரணத்தை கேட்டு நீதிபதி அதிர்ச்சியடைந்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்த தம்பதிகள் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு திருமணமான நிலையில், தற்போது 10 மாதங்களே ஆன நிலையில் விவாகரத்து கேட்டுள்ளார்.
குறித்த பெண் அளித்த மனுவை விவாரித்த நீதிபதி இவ்வழக்கை விசாரித்து விவாகரத்து கொடுத்துள்ள நிலையில், கணவர் மேல் முறையீட்டிற்கு கேரளா உயர்நீதிமன்றத்தினை நாடியுள்ளார்.
விவாகரத்திற்கு பெண் கூறியுள்ள காரணம் நீதிபதியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறித்த பெண் புகாரில் தனக்கு திருமணமாகி 10 மாதங்கள் ஆகிய நிலையில், தனது கணவர் பிற பெண்களுடன் தன்னை ஒப்பிட்டு பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும் தான் அழகாக இல்லை என்றும், அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதவராக தன்னை நடத்தியதாகவும், அதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் ஆகவே தனக்கு விவாகரத்து பெற்றுத் தரும்படி குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், சிஎஸ் சுதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த நீதிபதிகள்,”பேச்சின் மூலமாக ஒருவரை துன்புறுத்துவது மனரீதியாக நடத்தப்படும் கொடுமையே ஆகும். மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிட்டு பேசுவது, மற்றும் தனக்கு சரியான நிகர் இல்லை எனக்கூறுவது மனைவிக்கு பெரும் மனஉளைச்சலை தரும்.
இது வார்த்தைகளின் மூலம் கொடுமைப்படுத்துவது ஆகும். இதனை மனைவி பொறுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது” எனக் கூறி விவாகரத்து வழங்கி உத்தரவிட்டதுடன், கணவர் கொடுத்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளனர்.