அஜித் மகளை அள்ளிக்கொஞ்சும் தளபதி.!வைரலாகும் செம க்யூட் வீடியோ.!

அஜித், எச் வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். நடிகர் ஒரு சிறிய இடைவெளிக்காக ஐரோப்பாவுக்குச் சென்றார், இப்போது அவர் திரும்பிய பிறகு புதிய படப்பிடிப்பு அட்டவணையைத் தொடங்க விசாகப்பட்டினத்திற்குச் சென்றுள்ளார்.
தற்போது அஜித் படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யின் படப்பிடிப்பும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது என ‘வாரிசு’ ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் தல தளபதியான விஜய் மற்றும் அஜித் எபோதுமே சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் ஒரு சில பாடங்களில் ஒருவரை விமர்சித்தாலும் நிஜ வாழக்கையில் நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.

விஜய்க்கு திவ்யா ஷாஷா என்ற மகளும் சஞ்சீவ் என்ற மகனும் இருக்கின்றனர். அதே போல அஜித்திற்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார். மகளும் விஜயின் மகள் ஷாஷாவும் அஜித் மகள் அனுஷாவும் ஒன்றாக பேட்மிண்டன் பயற்சி எடுத்துவருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்கா சிறு வயதில் இருந்த போது அவரை விஜய் தூக்கி கொஞ்சிய வீடியோ ஒன்று தற்போது சமூக வளைத்தளத்தில் படு வைரலாக தற்போது வருகிறது. இத விடியோவை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருமே அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

2011-ம் ஆண்டு ‘மங்காத்தா’ மற்றும் ‘வேலாயுதம்’ படங்களின் படப்பிடிப்பின் போது அஜித்தும் விஜய்யும் சந்தித்தனர். 11 வருடங்களுக்குப் பிறகு அதே மாதிரி நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித் தனது அடுத்த படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.