Saturday, April 20, 2024 9:03 pm

ஓஹோ இது தான் விஷயமா நயன், விக்கி பார்சிலோனா பயணத்திற்கு முக்கிய காரணமே அஜித்தா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச்.வினோத்துடன் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அஜீத்தும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால், தயாரிப்பாளர்கள் விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய அட்டவணைக்கு தயாராகி வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டிலுள்ள பார்சிலோனாவுக்கு சென்றார்கள் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே. நேற்று கூட கருப்பு கிளாமர் உடையில் விக்னேஷ் சிவன் பதிவு செய்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் அஜீத் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ’ஏகே 62’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 1ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு பார்சிலோனாவில் தான் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே நயன்தாராவுடன் இரண்டாவது தேன் நிலவுக்கு சென்ற விக்னேஷ் சிவன் அப்படியே ’ஏகே 62’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்கு லொகேஷனையும் பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அஜித் நடித்து வரும் ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜனவரி 1ஆம் தேதி அவர் விக்னேஷ் சிவன் இயக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜித், எச் வினோத், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூன்றாவது கூட்டணியை ஏகே 61 குறிக்கிறது.இந்நிலையில், அஜித் தனது 62வது படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார். இதற்கு லைகா புரொடக்ஷன்ஸ் ஆதரவு அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்