வயிறு முட்ட குடித்து விட்டு இரவு பார்ட்டியில் சக நடிகர்களுடன் கூத்தடிக்கும் வனிதா !! வைரலாகும் வீடியோ

விஜயகுமார் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஐந்து வருடங்கள் தொடர்ந்து இந்த திருமணம் உறவு 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

இதன்பின், 2007ஆம் ஆண்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மூன்று வருடம் ஒன்றாக வாழ்ந்த இருவரும் 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்த வனிதா, அவருடைய நடவடிக்கை சரியில்லை என்பதன் காரணத்தினால் அவரை விட்டு விலகிவிட்டார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் அண்மையில் அவர் கலந்துகொண்ட இரவு பார்ட்டி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் வனிதா.