மறைவதற்கு முன் திரைப்பட விமர்சகர் கௌசிக் வைத்திருந்த உருக்கமான வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்! வைரல் புகைப்படம் !

பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழின் முன்னணி யூ டியூப் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, திரைப்பட விமர்சகராக பணியாற்றி மிகவும் புகழ்பெற்றவர்.

இவர் சினிமா புரொமோஷன், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும், பிஆர்ஓ தொடர்பான பணிகளையும் செய்து வந்தார். 37 வயதே ஆன இவர், கடந்த நாள் மாலை மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்துள்ளார்.

மாலை தூக்கத்திலேயே உயிரிழந்த இவரை அழைக்க சினிமா நிகழ்ச்சிக்கு அழைக்க சென்ற நபர்கள் தான். இவர் மரணம் அடைந்துவிட்டார் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இவரின் மரணம் தமிழ் சினிமா உலகை உலுக்கி உள்ளது. மேலும், பல முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தவர்.

இதனால் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே, கெளசிக் வைத்திருந்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இணையம் முழுக்க பரவி வருகிறது. அதில், “நல்ல உடல்நலம்தான் நம்முடைய சொத்து. மற்றதெல்லாம் அதற்கு பின்புதான். வலியை மறந்து விடுங்கள்..

வாழ்க்கையில் விட்டுக்கொடுக்க கூடாது” என்று கெளசிக் தனது வாட்ஸ் ஆப்பில் பயோவில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

அதிலும் சமீபத்தில் பலருக்கு இப்படி மாரடைப்பு வருவது, ஆண்கள் பலர் 37 வயதிலேயே மரணம் அடைவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.