சென்னை விமானநிலையத்தில் அஜித் செய்த சிறப்பான சம்பவம்.. குவியும் வாழ்த்துக்கள் !!

நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். நடிகர் ஒரு சிறிய இடைவெளிக்காக ஐரோப்பாவுக்குச் சென்றார், இப்போது அவர் திரும்பிய பிறகு புதிய படப்பிடிப்பு அட்டவணையைத் தொடங்க விசாகப்பட்டினத்திற்குச் சென்றுள்ளார்.

நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் 3வது படத்தில் இணைந்து நடித்து வருகிறார்.இந்தப்படத்தில் டைட்டில் உள்ளிட்ட எந்த அப்டேட்டும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. படத்தின் சூட்டிங் பூனாவில் நடைபெற்றது.

இதனிடையே சமீபத்தில் சூட்டிங் இடையில் கிடைத்த கேப்பில் இவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.நடிகர் அஜித்குமார் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் தன்னுடைய பாதையை செதுக்கியவர். அவரது ஆரம்ப கால படங்கள் அவரை மிகவும் அழகாக, காதல் நாயகனாக காட்டியது. தொடர்ந்து அமர்க்களம் போன்ற அதிரடிப் படங்களில் நடித்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்த அஜித், தற்போது தன்னுடைய வயதிற்கு ஏற்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபகாலங்களில் தன்னுடைய படங்களில் சமூக அக்கறையும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். இதையொட்டி இவரது நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் சிறப்பாக அமைந்தன. ஆனால் அவரை பிட்டாக, சிறப்பாக பார்க்கவே அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் அவரது சமீபத்திய வலிமை படம் அமைந்தது.

இந்தப் படத்தில் பைக் மற்றும் சென்டிமெண்ட் காட்சிகள் அதிகமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தாலும் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படமும் வசூல்ரீதியாக சூப்பர் ஹிட்டடித்தது. இதை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரும் உறுதி செய்திருந்தார். தொடர்ந்து அஜித்தின் 3வது படத்தை இவர் தற்போது தயாரித்து வருகிறார்.

இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்களுடன் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து இடையில் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டு பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அஜித். தற்போது பூனாவில் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது.

வலிமை படத்தில் இவரது உருவம் குறித்த கேலி எழுந்த நிலையில், தற்போது ஏகே61 படத்திற்காக சிறப்பாக உடலை பிட்டாக்கியுள்ளார் அஜித், இந்நிலையில் தற்போது சென்னை விமானநிலையத்தில் இவரை கண்ட ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுக்கு மறுப்பு சொல்லாமல் அஜித்தும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து சிறிது நேரம் அங்கேயே செலவிட்ட அவர், அங்கிருந்து புறப்படும்போது ரசிகர்களிடம் தான் புறப்படுவதாக கூறி செல்கிறார். இந்த வீடியோ இணையதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவருடைய இந்த பண்பு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

2011-ம் ஆண்டு ‘மங்காத்தா’ மற்றும் ‘வேலாயுதம்’ படங்களின் படப்பிடிப்பின் போது அஜித்தும் விஜய்யும் சந்தித்தனர். 11 வருடங்களுக்குப் பிறகு அதே மாதிரி நடக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள். ‘ஏகே 61’ படப்பிடிப்பை முடித்த பிறகு, அஜித் தனது அடுத்த படத்திற்காக விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.

பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமான இப்படம் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்தின் சில பகுதிகளும் கடந்த மாதம் புனேவில் படமாக்கப்பட்டது. படத்தின் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார், மேலும் படத்தின் நடிகர்களில் சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், அஜய் மற்றும் கவின் ஆகியோர் அடங்குவர்