அஜித் 62 படத்தின் அசத்தலான லேட்டஸ்ட் அப்டேட் இதோ !!

நடிகர் அஜித், எச் வினோத் இயக்கத்தில் தற்காலிகமாக ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளார். நடிகர் ஒரு சிறிய இடைவெளிக்காக ஐரோப்பாவுக்குச் சென்றார், இப்போது அவர் திரும்பிய பிறகு புதிய படப்பிடிப்பு அட்டவணையைத் தொடங்க விசாகப்பட்டினத்திற்குச் சென்றுள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது “AK61” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடித்த முடித்த பிறகு அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும், லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விட்டது.

குடும்ப கதையை மையமாக வைத்து அந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகவும், அடிக்கடி சமூக வலைதளத்தில் செய்திகள் பரவி வருகிறது. காதல் கதைகளை அருமையாக படம் எடுக்கும் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எந்த மாதிரி படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

அஜித் தற்போது “AK61” திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். அதை போல் விக்னேஷ் சிவன் “AK62” படத்திற்கான கதை மெருகேற்றும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார். படத்திற்கான லொகேஷன் தேடும் பணிகள் மற்றும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், “AK62” படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ள தேதி குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், AK62 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படவுள்ளதாம். அதற்குள் அஜித் “AK61” படத்தின் படப்பிடிப்பை முடித்து விடுவார். எனவே அடுத்த ஆண்டிலிருந்து AK62 படத்தின் படப்பிடிப்பை தொடங்கி தீபாவளி அன்று படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது,

பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் படமான இப்படம் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் நடைபெற்றது. படத்தின் சில பகுதிகளும் கடந்த மாதம் புனேவில் படமாக்கப்பட்டது. படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார், மேலும் படத்தின் நடிகர்களில் சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், அஜய் மற்றும் கவின் ஆகியோர் உள்ளனர்.