Saturday, April 20, 2024 8:14 am

மீண்டும் அதே செண்டிமெண்ட் !! இந்த படமும் அதே மாதிரியா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, எச்.வினோத்துடன் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அஜீத்தும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுவதால், தயாரிப்பாளர்கள் விசாகப்பட்டினத்தில் ஒரு புதிய அட்டவணைக்கு தயாராகி வருகின்றனர்.

ஏகே 61 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படம், ஒரு திருட்டுத் திரில்லர் என்று கூறப்படுகிறது. அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார். வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த கூட்டணி இணைந்த முதல் படமான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒரு ரீமேக் திரைப்படம். அதேபோல் வலிமை திரைப்படம் அஜித் கூறிய ஒரு வரி கதை என கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தான் வினோத் எழுதி இயக்கும் ஒரிஜினல் திரைப்படம் என கூறப்படுகிறது. ஆதலால் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஷாக்கிங் செய்தி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திலும் அஜித்திற்கு மிகவும் பிடித்தமான பைக் சேசிங் காட்சிகள் இருக்கிறதாம். இதே போல் இதற்கு முந்தைய திரைப்படங்களான விவேகம், வலிமை திரைப்படங்களிலும் இதே போல் பைக் சேஸிங் காட்சிகள் இருந்தது. இருந்தும் படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு பெறவில்லை.

1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பிரேம புத்தகம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் அஜித் சமீபத்தில் திரையுலகில் தனது 30வது ஆண்டை நிறைவு செய்தார். இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே அஜித் கடைசியாக ஹெச். வினோத் இயக்கிய வலிமை படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் – இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

அப்படி இருக்க, மீண்டும் அஜித் இவ்வாறு செய்து உள்ளார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் சற்று அதிர்ந்து போய் உள்ளனர். அஜித் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அஜித் தொடர்ந்து பைக் சேசிங் காட்சிகளின் நடிப்பது பிடிக்குமாக இருக்கலாம்.

ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் போன்ற ஒரு நல்ல நடிகர், தனது திறமையை வெவ்வேறு கதைக்கலங்களில் வெவ்வேறு விதமான கதை தேர்வின் மூலம் காட்டி ரசிகர்களை திருப்திப்படுத்துவதை தான் விரும்புவார்கள். இது அஜித்தின் திரைப்படமாக உருவாகிறதா? வினோத்தின் திரைப்படமாக உருவாகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமைக்குப் பிறகு அஜித், எச் வினோத், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூன்றாவது கூட்டணியை ஏகே 61 குறிக்கிறது.

இந்நிலையில், அஜித் தனது 62வது படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணையவுள்ளார். இதற்கு லைகா புரொடக்ஷன்ஸ் ஆதரவு அளித்துள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்