லெஜண்ட் படத்தால் தலையில் துண்டை போட்டுக்கொண்ட சரவணன் அண்ணாச்சி !பேசாம துணி கடையிலேயே இருந்துருக்கலாம்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தி லெஜண்ட். இப்படத்தில் விவேக், விஜயகுமார், லதா, ரோபோ ஷங்கர், யோகி பாபு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வெளிவந்த இப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக வசூலில் மிகமோசமான நிலைக்கு சென்றது. இந்நிலையில், தி லெஜண்ட் திரைப்படம் மொத்தமாக ரூ. 12.5 கோடி தான் வசூல் வந்துள்ளது.

இதில், நம்ம அண்ணாச்சிக்கு ரூ. 5 முதல் ரூ. 6.5 கோடி வரை கைக்கு கிடைத்திருக்கும். ரூ. 45 கோடி செலவில் உருவான தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் சுமார் ரூ. 40 கோடி வரை நஷ்ட்டத்தை அடைந்துள்ளார் அண்ணாச்சி.

இதன்முலம், ஒரு தயாரிப்பாளராக அண்ணாச்சி தலையில் துண்டு விழுந்துவிட்டது என பலரும் கலாய்த்து வருகிறார்கள்.