இரண்டாவது ஹனிமூன் சென்ற நயன்தாரா கணவருக்காக செய்த வேலையை பாருங்க! ஹனிமூன் சென்ற இடத்திலும் இப்படியா?

நடிகை விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் பார்சிலோனாவில் தங்களது இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றது.

ஐயா படத்தில் அறிமுகமாக நயன்தாரா இயக்குனரை விக்கியை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்பு தனது ஹனிமூனை தாய்லாந்து சென்று கொண்டாடிய நிலையில், புகைப்படங்களையும் வெளியிட்டனர்.

தொடர்ந்து நாடு திரும்பிய அவர், ஜவான், இறைவன் படங்களில் பிசியாக, தன்னுடைய ஏகே62 படத்திற்கான வேலைகளில், முன் தயாரிப்பு பணிகளில் பிசியானார் விக்னேஷ் சிவன்.

இவர்களின் திருமண காட்சிகள் விரைவில் நெட்பிளிக்சில் டாக்குமெண்ட்ரியாக வெளியாக உள்ள நிலையில், தற்போது இந்த ஜோடி கிடைத்த கேப்பில் ஸ்பெயின் மற்றும் பார்சிலோனாவில் இரண்டாவது ஹனிமூனை கொண்டாட சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் தன்னுடைய கணவனுக்காக விதவிதமான ட்ரெஸ்களை நயன்தாரா பர்சேஸ் செய்துள்ளார். இதன் புகைப்படங்களும் தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகின்றன.

மேலும் நயன்தாரா தற்போது சென்றுள்ள நாட்டில் வீதியில் ட்ரம்ஸ் வாசித்துக் கொண்டிருந்த நபரின் திறமையை மெய்மறந்து ரசிக்கும் காடசியினை விக்கி எடுத்து வெளியிட்டுள்ளார்.