ஒரு வாரத்தில் எடையை இரு மடங்கா குறைக்க இதை குடிச்சாலே போதுமாம்!

உடல் எடையை குறைப்பதற்கான ரகசியம் உங்கள் சமையலறையில் உள்ளது.

வெந்நீரில் ஒரு சில ஏலக்காய்களைச் சேர்த்து குடிப்பது எடை இழப்புக்கு சிறந்த மருந்தாம்.

இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு எரியும் செயல்முறையை அதிகரிக்க உதவுகிறது.

இது வேகமாக எடை இழக்க உதவுகிறது.பண்டைய காலங்களில், ஏலக்காயை சிறப்பான அல்லது ஆடம்பரமான உணவுக்குப் பிறகு வாய் புத்துணர்ச்சியாக வழங்குவதற்கான காரணம் இதுதான்.

வயிற்றில் சுரக்கும் ஏலக்காயை மென்று பிறகு வெளியாகும் சாறுகள் செரிமானத்தை மேம்படுத்தவும் கொழுப்பு இழப்பை துரிதப்படுத்தவும் உதவியது.வேகமாக உடல் எடையை குறைக்க திட்டமிட்டால், 4-5 ஏலக்காய்களை ஒரு கிளாஸ் வெந்நீரில் போட்டு பெட் டைம் பானமாகச் சேர்த்து மாற்றத்தைக் காணவும்.

உங்கள் பானங்கள் மற்றும் உணவில் மசாலாப் பொருள்களைச் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தி வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும்.

பெருஞ்சீரகம், ஏலக்காய், கிராம்பு போன்ற மசாலாப் பொருட்களை உங்கள் பானங்கள் மற்றும் சூப்களில் சேர்ப்பது கொழுப்பு இழப்பு செயல்முறையை துரிதப்படுத்த உதவும்.

ஏலக்காயில் பாலிஃபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் அதிக அளவில் உள்ளது.
இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதோடு புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது. நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் போன்றவற்றுக்கு ஏலக்காய் ஓர் சிறந்த மருந்தாகும்.
மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், ஏலக்காய் டீ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள்.
டீத்தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.
இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால் ஏலக்காய் டீயை குடிப்பதன் மூலம் நுரையீரலில் இரத்த ஒட்டம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் குறையும்.
தலைவலி அடிக்கடி வந்தால் அந்த சமயத்தில் ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் தலைவலி விரைவில் குணமடையும்.
செரிமான பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்தால் அஜீரணக் கோளாறு, உப்பிசம் போன்றவை நீங்கும்.
ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் இதய நோய்களில் இருந்து விடுபடலாம். ஏலக்காய் டீயை தொடர்ந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் உடலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.