உண்மையிலேயே இந்த பழக்கம் உள்ளவரா அஜித்…? கண்ணெதிரே பாத்து ஷாக்கான நடிகர் கூறிய உண்மை !!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். மிகவும் கஷ்டப்பட்டு எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறார் என்றால் அவரின் விடாமுயற்சியே காரணம். எந்த ஒரு விழாக்களிலும் கலந்து கொள்ளாதவர். மேடை ஏறி எதை பற்றியும் விமர்சனம் செய்யாதவர்.

சமீப காலமாகவே இந்த மாதிரியான பழக்கங்களை தவிர்த்து வரும் அஜித்தை சந்திப்பதற்காக நடிகர் அருள் நிதி அவரின் திருமணத்திற்காக அழைப்பிதலை கொடுக்க சென்றிருக்கிறார். அப்போது அதுவரை அஜித்தை நேரில் பார்க்காத அருன் நிதி அன்று தான் முதல் முதலில் அஜித்தை பார்க்கிறார்.

அந்த சமயம் அருள் நிதி அவர் நடித்த டிமாண்டி படம் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அருள் நிதி மற்றும் நண்பர் இருவருடன் அஜித் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இவர்களை பார்த்ததும் அஜித் முதலில் உங்களுடைய டிமாண்டி படத்திற்காக வாழ்த்துக்கள் என்று கூறி தான் பேச்சை ஆரம்பித்தாராம்.

பின் பேசிக் கொண்டிருக்கையில் வீட்டு வேலையாள் ஜூஸ் கொண்டு வந்து கொண்டிருந்தாராம்.அவர் கொண்டு வருவதற்குள் அஜித்தே எழுந்து போய் அந்த ஜூஸ்ஸை வாங்கி அவர் கையாலயே எல்லாருக்கும் பரிமாறினாராம். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அருள் நிதிக்கு அப்பொழுது தான் புரிந்ததாம். ஏன் எல்லாருக்கும் அஜித்தை மிகவும் பிடித்து போகின்றது என. மேலும் ஒருவர் ஒரு விஷயத்தில் இருந்து விலக விலக தான் மிகவும் ஈர்க்கப்படுவார். அந்த வகையில் தான் எல்லோராலும் அஜித் ஈர்க்கப்படுகிறார் என தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார் அருள் நிதி.