Wednesday, March 27, 2024 6:11 am

கார் விபத்தினால் பிரபல நடிகை மரணம்!! வைரலாகும் புகைப்படம் ரசிகர்கள் அதிர்ச்சி!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமெரிக்க நடிகையான அன்னே ஹெச் (53), ‘அனதர் வேர்ல்ட்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

இந்த தொடரில் விக்கி ஹட்சன் மற்றும் மார்லி லவ் என்ற இரட்டை வேடத்தில் நடித்தார், இது அவரது நடிப்பிற்காக எம்மி விருது மற்றும் இரண்டு சோப் ஓபரா டைஜஸ்ட் விருதுகளை பெற்றது.

அதனைத் தொடர்ந்து, 90-களில் சிக்ஸ் டேஸ், செவன் நைட்ஸ், டோனி பிராஸ்கோ, ஐ நோ வாட் யூ டிட் லாஸ்ட் சம்மர், வால்கனோ, ரிட்டர்ன் டு பாரடைஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 5-ந்தேதி தனது மினி கூப்பர் காரில் சென்று கொண்டிருந்தபோது, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கினார். இதுபற்றி தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதில், படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நடிகை அன்னே ஹெச்சின் முதுகு பகுதியில் அதிகளவில் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு மூளையில் தீவிர காயம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும் அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து அதிவேகம் காரணமாக ஏற்பட்டதாகவும் அவர் மது அருந்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும், போலீசார் இதனை உறுதிப்படுத்தவில்லை. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த அன்னே ஹெச் அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார் என அதிகாரப்பூர்வ முறையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு ஹோமர் லப்பூன் மற்றும் அட்லஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவர், வலியில் இருந்து விடுபட்டு நிரந்தர சுதந்திரம் அடைந்து விட்டார் என நம்புகிறேன் என்று ஹோமர் தெரிவித்து உள்ளார். அன்னே ஹெச் உயிரிழந்து விட்டார் என்ற தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்