Thursday, March 28, 2024 6:19 pm

இன்ஜினியருக்கு புதிய பாடத்திட்டம்: ஏயூவில் ஸ்டாலின் ஆலோசனை

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.

முன்னதாக, வேலை வாய்ப்புக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. அதன்படி, பொறியியல் பாடத்திட்டத்தை திருத்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

சமீபத்தில், பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் வேல்ராஜ் பேசுகையில், ”திருத்தப்பட்ட பொறியியல் பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

புதிய பாடத்திட்டத்திற்கு இன்று நடைபெறும் கல்வி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும். இந்த புதிய பாடத்திட்டமானது, காலாவதியான விஷயங்களை நீக்கி, தொழில் சம்பந்தப்பட்ட தலைப்புகளைச் சேர்ப்பதன் மூலம், தொழில் தேவைகளுக்கும் மாணவர்களின் திறமைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றும் வேல்ராஜ் கூறினார். இந்த பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்