அதிரடியாக அஜித் 61 படத்தில் இணைந்த பிரபல யுடியூப் பிரபலம் !! நீங்களே பாருங்க

அஜித் தனது 61வது படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் கைகோர்த்துள்ளார், மேலும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘அஜித் 61’ அல்லது ‘ஏகே 61’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜூன் தொடக்கத்தில் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்த பிறகு, படத்தின் முக்கிய படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் ‘அஜித் 61’ படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

மேலும் பலர் நடித்து வருகின்றனர். அது பற்றிய அறிவிப்பை அவ்வப்போது அவர்களே சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல யுடியூப் பிரபலமான நடிகை புவனேஸ்வரி நடித்துள்ளதை அவரே வெளியிட்டுள்ளார். மேலும் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரோடு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

‘அஜித் 61’ முதலில் 2022 தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டது, ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் படத்தை பிற்பட்ட தேதிக்குத் தள்ளியுள்ளது, மேலும் படம் டிசம்பரில் வெளியாகலாம்.