Thursday, March 28, 2024 6:29 pm

அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

லால் சிங் சத்தா விமர்சனம்: அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அமீர் மீண்டும் கரீனா கபூர் ஜோடியாக நடிக்கிறார். லால் சிங் சத்தாவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாட்களாக இருந்து வருகிறது. இப்போது நீங்கள் படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா, எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் இந்த மதிப்பாய்வைப் படியுங்கள்.

சராசரி குழந்தைகளை விட குறைவான ஐக்யூ லெவல் கொண்ட லால் சிங் சத்தா என்கிற மனிதனின் வாழ்க்கையையும் அவனுக்கு கிடைக்கும் அந்த காதலும் அதற்கு பின்னால் வரும் ஏமாற்றங்களும் தான் லால் சிங் சத்தா படத்தின் கதை.

ஹாலிவுட்டில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகி உள்ள அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், படமாக அந்த படம் எப்படி இருக்கிறது என படத்தை பற்றிய விமர்சனம்

படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டிய அதுல் குல்கர்னி தான் ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப்பை நம்ம நாட்டு ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை வடிவமைத்து நடிகர் அமீர்கானை வற்புறுத்தி இந்த படத்தை பண்ண வைத்திருக்கிறார். படத்தை பார்த்த இந்த ரசிகர் இது ஒரு பர்ஃபெக்ட்டான பாலிவுட் படமாக அமைந்துள்ளது. சில இடங்களில் துக்கம் தொண்டையை அடைக்கும், சில இடங்களில் சிரிக்க வைக்கும் உன்னதமான படம் என பாராட்டி உள்ளார்.

அமீர்கானின் லால் சிங் சத்தா பெரிய நகரங்களிலும் மெட்ரோக்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என நினைக்கிறேன். அதே சமயம் அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் திரைப்படம் கிராமங்களில் கல்லா கட்டும் என இந்த நெட்டிசன் கருத்து கூறியுள்ளார். அமீர்கானின் லால் சிங் சத்தா படம் ஒரு எபிக் என்றும் விமர்சித்துள்ளார்.

டாம் ஹேங்ஸ் நடித்த ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்திற்கு கொஞ்சம் கூட குறைவோ அதிகமோ இல்லாமல் சரியாக வந்திருக்கும் தரமான படம் என பிரபல இங்கிலாந்து பத்திரிகையான தி கார்டியன் தனது விமர்சனத்தை வைத்துள்ளது. அதனை இந்த நெட்டிசன் ஷேர் செய்து லால் சிங் சத்தா தரமான படம் என்றும் ரசிகர்களை நிச்சயம் தியேட்டருக்கு கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார்.

அமீர்கானை எதிர்க்கிறேன் என அத்வைத் சந்தனின் இந்த அழகான படத்தை மிஸ் பண்ணிடாதீங்க, வாழ்க்கையின் தத்துவத்தை அப்படியே எடுத்து உரைக்கிறது இந்த படம். முழுவதுமே பாசிட்டிவிட்டி தான். அன்பை லால் சிங் சத்தாவாக பரப்பி இருக்கிறார் அமீர்கான்

ஒரு பக்கம் படத்திற்கு எதிரான நெகட்டிவ் டிரெண்டிங் மற்றும் மறுபுறம் படத்தை பார்த்தவர்கள் சொல்லும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்துள்ள நிலையில், லால் சிங் சத்தாவின் வசூல் உலகளவில் எப்படி வந்திருக்கிறது என்பதை நாளை தெரிந்து விடும். முதல் நாள் வசூலை விட வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘பாரஸ்ட் கம்ப்’ என்ற ஆங்கிலப் படத்தின் ஹிந்திப் பதிப்பாக லால் சிங் சத்தா அழைக்கப்படுவார் என்பது உண்மைதான். ஆனால் அதுல் குல்கர்னி எழுதிய இந்தப் படம் அந்த ஆங்கிலப் படத்தை விட அதிகம். நீங்கள் பாரஸ்ட் கம்பைப் பார்த்ததை மறந்து விடுங்கள். நீங்கள் நினைவில் வைத்திருந்தாலும், இது ஒரு தனித்துவமான வழக்கு என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்