Wednesday, March 27, 2024 6:09 am

லால் சிங் சத்தா படத்தின் திரைவிமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

‘லால் சிங் சத்தா’ ஹாலிவுட் கிளாசிக் ஃபாரெஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும், மேலும் கரீனா கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.இயக்குநர் ராபர்ட் ஜெம்மெக்கிஸ் இயக்கத்தில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான தி ஃபாரஸ் கம்ப் திரைப்படத்தின் கதையை சுமார் 10 ஆண்டுகள் செலவு செய்து உருவாக்கி உள்ளாராம் அதுல் குல்கர்னி.

மேலும், அந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராடி இந்த படத்தை எடுத்துள்ளதாக புரமோஷனின் போது அமீர்கான் மற்றும் அதுல் துல்கர்னி கூறியிருந்தனர்.

இந்நிலையில், 20 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இந்திய வெர்ஷனாக உருவாகி உள்ள லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு என்பது குறித்து விரிவாக இங்கே பார்ப்போம்

தி ஃபாரஸ்ட் கம்ப் படம் பார்த்தவர்களுக்கு ஏற்கனவே கதை தெரிந்திருக்கும். ஸ்பெஷல் சைல்டாகவும் ஐக்யூ லெவல் குறைவாகவும் உள்ள லால் சிங் சத்தா சரியாக நடக்கக் கூட முடியாமல் அவதிப்படும் நிலையில், அவனது சிறு வயது தோழி ரூபா எதிரிகளிடம் இருந்து தப்பிக்க ஓடு லால் சிங் ஓடு என ஊக்கம் கொடுக்க, அவனது வாழ்க்கையின் ஓட்டம் தொடங்குகிறது. விளையாட்டில் சாதனை, அப்படியே கல்லூரி படிப்பை முடித்து விட்டு இந்திய ராணுவத்தில் சேர்வது, காதலியை தேடிச் செல்வது, காதலி பிரிந்து செல்ல பல ஆண்டுகள் ஓடுவது இறுதியில் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? காதலிக்கு என்ன ஆனது என்பது தான் லால் சிங் சத்தா படத்தின் கதை.

தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் அமெரிக்கவின் அரசியல் கதையோடு ஒருங்கே நகரும், அடிக்கடி அமெரிக்க அரசியலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம், குடியரசுத் தலைவர்களுடன் கம்ப் உரையாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதே போல இந்திய அரசியல் குறித்த காட்சிகளையும் ராணுவத்தில் லால் சிங் சத்தா பணியாற்றிய சம்பவங்கள், கார்கில் போர் உள்ளிட்டவற்றை இந்திய ரசிகர்களுக்காக மாற்றி எழுதியதிலேயே அதுல் குல்கர்னி ஸ்கோர் செய்து விட்டார். அதை படமாக்கிய விதத்தில் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கிய அத்வைத் சந்தன் அசத்தி உள்ளார்.

அமீர்கான் தலைசிறந்த நடிகர் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. லால் சிங் சத்தா படத்தின் ஆரம்பத்தில் ரயிலை பிடித்துக் கொண்டு (அந்த படத்தில் பார்க் பெஞ்ச்) கையில் இருக்கும் பெட்டியில் இருந்து பானிப்பூரியை எடுத்துக் கொடுத்து அருகே அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு கதையை சொல்வது போல ஆரம்பித்து லால் சிங் சத்தாவின் பயணத்தை சொல்வது சிறப்பு. ஆனால், அவரது இளம் வயது கதாபாத்திர காட்சிகளில் அதிகமாக பிகே அமீர்கான் எட்டிப் பார்ப்பது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

ஜென்னி என்கிற பெயர் தான் விண்ணைத் தாண்டி வருவாயா ஜெஸ்ஸியாக மாறியதா? என்றெல்லாம் ரசிகர்களுக்கு கேள்வி எழுந்தது. லால் சிங் சத்தாவில் ரூபாவாக கரீனா கபூர் நடித்துள்ளார். சிறுவயதிலேயே அப்பாவின் தொல்லை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறும் அவர், நாடோடியாக செல்வதும், அதிக ஆண் நண்பர்களுடன் பழகுவதும், லால் சிங் சத்தாவின் காதலை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் குழம்புவதும் என தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

தி ஃபாரஸ்ட் கம்ப் படத்தை விட அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுத்துள்ளதே பெரிய பிளஸ் தான். மேலும், அமீர்கான், கரீனா கபூர் மற்றும் நாக சைதன்யாவின் நடிப்பு பலம். அந்த படத்தில் ஷ்ரிம்ப் பிசினஸ் செய்யலாம் என சொல்லிக் கொண்டே இருக்கும் நண்பர் போரில் உயிரிழந்து விடுவார். அதை சற்றே ஜட்டி தயாரிக்கும் பிசினஸாக இங்கே நாக சைதன்யாவுக்கு மாற்றி இருப்பது ரொம்பவே ஃபன்னாகவும் ரசிகர்களை தியேட்டரில் சிரிக்கவும் வைத்துள்ளது. சத்யஜித் பாண்டே எனும் சேதுவின் ஒளிப்பதிவு பிரம்மாண்ட. தனுஜ் திக்குவின் பின்னணி இசை மனதுக்கு இதம். மதங்களை விட மனிதம் முக்கியமானது என சொல்லப்பட்டுள்ள கருத்து என படம் முழுக்கவே பாசிட்டிவ் எனர்ஜியை கொடுப்பது மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி உள்ளது.

அதிக பட்ஜெட்டில் எடுத்தாலும், அமீர்கான் மற்றும் கரீனா கபூர் இருவரது இளமைக் கால போர்ஷனுக்கு தலையை ஒட்டவைத்தது போல உள்ள சிஜி ரொம்பவே கொடுமையாக படத்தை கெடுத்து விடுகிறது. தனுஜ் திக்கு பின்னணி இசை நன்றாக இருந்தாலும், இசையமைப்பாளர் ப்ரீதமின் பாடல்கள் ஒரு சிலவற்றை தவிர மற்றவை சுமார் ரகமாக உள்ளது. படம் முழுக்க ஹீரோ அமீர்கான் ஓடிக் கொண்டிருப்பது 2கே கிட்ஸ்களை எந்தளவுக்கு கவரும் என்பது மிகப்பெரிய கேள்விக் குறிதான்.

லால் சிங் சத்தாவின் தமிழ் பதிப்பை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். இப்படத்தில் நாக சைதன்யா ராணுவ அதிகாரியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்