சங்கர் மகள் அதிதியால் சிவகார்த்திகேயனுக்கு இப்படியொரு நிலையா !!கமிட்டாகிய மூன்றே நாளில் ஏற்பட்ட பிரச்சனை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக குறுகிய காலக்கட்டத்தில் தன் உழைப்பால் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படத்தில் 100 கோடி வசூல் சாதனைக்கு பிறகு பிரின்ஸ், அயலான், மாவிரன் போன்ற படங்களில் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு தான் நடைபெற்றது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சங்கர் மகள் அதிதி சங்கர் கமிட்டாகியுள்ளார். அவருக்கு இப்படத்தில் 25 லட்சம் சம்பளமாக கொடுக்கவுள்ளார்களாம்.

இதேபோல் இயக்குனர் மிஸ்கின் வில்லனாகவும், யோகிபாபு மற்றும் கவுண்டமணியும் நடிக்கவுள்ளார்களாம். இந்நிலையில் பூஜை ஆரம்பித்த மூன்றே நாட்களில் மாவீரன் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இதற்கு காரணம் பைனான்ஸ் பிரச்சனை என்று கூறப்பட்டு வருகிறது. ஆரம்பித்த மூன்றே நாளில் அதுவும் அதிதி சங்கர் கமிட்டாகிய இரண்டாம் படத்தின் ஷூட்டிங்கிற்கு இப்படியொரு பிரச்சனையா என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.