Saturday, April 20, 2024 7:03 pm

பிரபல இயக்குனருக்கு போன் செய்து கதைகேட்ட அஜித் !! ஆனால் சந்திப்பு நடப்பதற்குள் நேர்ந்த சோகம்!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அஜித் இயக்குனர் சாச்சியிடம் தனக்காக கதை கேட்டதாக இப்போது சாச்சியின் மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தார். பிரபல திரைக்கதை ஆசியரான சாச்சி இயக்கி இருந்தார். மிகச்சிறந்த பாராட்டுகளையும் வசூலித்தது இந்த திரைப்படம். சில தேசிய விருதுகளையும் வென்றது.

இந்த படத்தின் இயக்குனர் சாச்சியின் அடுத்த படங்கள் மீதான ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார். இது சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் இப்போது இயக்குனர் சாச்சியோடு அஜித் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதாக சாச்சியின் மனைவி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் வெளியான போது அஜித் சாச்சியை அழைத்தார். தனக்கு ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறி அய்யப்பனும் கோஷியும் படத்தை வெகுவாகப் பாராட்டினார். சாச்சி தற்போது அறுவை சிகிச்சை செய்துள்ளதால் விரைவில் சென்னையில் வந்து சந்திக்கிறேன் எனக் கூறினார். ஆனால் அந்த சந்திப்பு நடப்பதற்குள் சாச்சி மறைந்துவிட்டார்” எனக் கூறியுள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்