29 C
Chennai
Monday, February 6, 2023
Homeசினிமாபிரபல இளம் நடிகையால் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி வீட்டில் வெடித்தது பிரச்சனை !!

பிரபல இளம் நடிகையால் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி வீட்டில் வெடித்தது பிரச்சனை !!

Date:

தொடர்புடைய கதைகள்

பாபி சிம்ஹாவின் வசந்த முல்லை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகி வரும் வசந்த முல்லை படத்தின் ட்ரெய்லர்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை ஸ்டாலின்...

சமீபத்தில் பெய்த பருவமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு...

வாரிசு படத்தின் ரஞ்சிதமே ரஞ்சிதமே வீடியோ பாடல் இதோ...

வாரிசு படத்தின் ரஞ்சிதாமே வீடியோ பாடலை தயாரிப்பாளர்கள் திங்கள்கிழமை சமூக...

அட்ரா சக்க! சிறப்பான தரமான 2 சம்பவம் தயார்!...

நடிகர் அஜித் குமாரை திருமணம் செய்து கொண்ட நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராமில்...

வெற்றி மாறனும் ஜூனியர் என்டிஆரும் இணையும் படத்தை பற்றிய...

வெற்றி மாறன் மற்றும் ஜூனியர் என்டிஆர் விரைவில் ஒரு திட்டத்தில் இணைந்து...

ஜேடி ஜெர்ரி இயக்கிய அறிவியல் புனைகதை தமிழ் திரைப்படமான ‘தி லெஜண்ட்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் நடிப்பில் அறிமுகமான சரவணன் அருள் மற்றும் கோலிவுட்டில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் விவேக், யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா, ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், இதற்கு முன்பு அவருக்கு சொந்தமான கடை விளம்பரங்களில் நடித்து பிரபலமானார். ஆரம்ப கட்டத்தில் பண்டிகை நாட்களில் அப்போதைய காலகட்டத்தில் இருக்கும் முன்னணி நடிகைகளை தனது கடை விளம்பரத்தில் அதிக சம்பளம் கொடுத்து நடிக்க வைப்பார் லெஜன்ட் சரவணன்.

அதன்பின்பு தானே தன்னுடைய கடல் விளம்பரத்தில் நடித்தார். அவர் நடிக்கும் விளம்பர படங்களில் பல முன்னணி நடிகைகள் மத்தியில் விளம்பர படங்களில் ஆட்டம் போடுவார். ஒரே விளம்பர படத்தில் மூன்று நடிகைகள் இடம் பெறுவதால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய வரும் என்பதை பற்றி எல்லாம் அவர் சற்றும் கவலைப்பட மாட்டார். இதற்கு காரணம் சினிமா மீது கொண்ட மோகன் தான் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விளம்பர படங்களில் நடித்து கேலி கிண்டலுக்கு உள்ளாகி, அதனால் பிரபலமான லெஜெண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாகும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில், தன்னுடைய சொந்த தயாரிப்பில் லெஜண்ட் படத்தில் ஹீரோவாக உருவெடுத்தார். இந்த படத்தில் பல முன்னணி நடிகைகள் நடிக்க பேச்சுவார்த்தை நடந்த நிலையில், அதிகம் சம்பளம் கொடுக்க முன் வந்து முன்னணி நடிகைகள் அண்ணாச்சி உடன் நடிக்க மறுத்துவிட்டனர்.

ஹிந்தியில் இருந்து தமிழுக்கு ஹிந்தியில் இருந்து தன்னுடன் ஜோடி சேர நடிகையை இறக்குமரி செய்த லெஜென் சரவணன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பள அளவுக்கு தன்னுடன் ஜோடி சேர்ந்த நடிகைக்கு சம்பளம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். இதேபோன்று லெஜெண்ட் படத்தில் பணியாற்றிய மற்றவர்களுக்கும் அவர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் லெஜன்ட் படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஒரு படம் நடிக்கும் முடிவில் இருக்கும் அண்ணாச்சி குடும்ப உறுப்பினர்கள் அவர் மீண்டும் படம் நடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லெஜெண்ட் படத்திற்கு மட்டும் சுமார் 30 கோடி வரை செலவு செய்துள்ளார் லெஜெண்ட் என்றும். ஆனால் படம் மக்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளது.

மேலும் தான் நடிக்கும் அடுத்த படத்தில் எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை தற்பொழுது தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.நடிகைகளுக்கு சம்பளத்தை அண்ணாச்சி கொட்டி கொடுப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர். ஆசைக்கு ஒரு படம் நடித்தது போதும் மேலும் சினிமாவில் நடித்து பணத்தை இழக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படும் நிலையில், அடுத்து லெஜெண்ட் சரவணன் படம் நடிப்பதில் சிக்கலாகி உள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

‘தி லெஜண்ட்’ ஒரு பெரிய பட்ஜெட் படம் மற்றும் அதை சரவணன் அருள் தனது ஹோம் பேனரில் தயாரித்துள்ளார். தொழிலதிபராக இருந்து நடிகராக மாறிய அவர் தனது திரைப்படத்தை உலகம் முழுவதும் 2500 திரைகளில் வெளியிட்டார்;

அதில் 650 திரைகள் தமிழ்நாட்டில் இருந்தன. இப்படம் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் ரூ.65 கோடி வசூல் செய்து சாதனை படைத்தால் வெற்றி பெற்றதாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய கதைகள்