ஆலந்தூர் வழிகாட்டி பலகை விபத்தில் படுகாயம் அடைந்த வாகன ஓட்டி உயிரிழந்தார்

ஜிஎஸ்டி சாலையில் வழிகாட்டி பலகை விழுந்ததில் பலத்த காயமடைந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் சண்முக சுந்தரம் (30) ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்ததாக தந்திச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை 3 மணியளவில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சைன் போர்டை வைத்திருக்கும் தூண் மீது எம்டிசி பேருந்து மோதியதால் ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே நெடுஞ்சாலைத் துறையின் பெரிய வழிகாட்டி பலகை விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இருசக்கர வாகனம், லோடு வேன், ஆட்டோரிக்‌ஷா ஆகியவற்றின் மீது பலகை விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்றவர் நசுங்கியது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்