Saturday, June 15, 2024 9:28 am

பரத் நடித்த ‘ லாஸ்ட் 6 ஹவர்ஸ் ‘ படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பரத்தின் ‘கடைசி ஆறு மணி நேரம்’ ஒரு சரியான பழிவாங்கும் த்ரில்லர், இதில் குற்றவாளிகள் கோபத்தில் கொதித்தெழுந்த ஒரு மனிதனால் ஈர்க்கப்படுகிறார்கள். இந்தப் படம் ஸ்டீபன் லாங்கின் ‘டோன்ட் ப்ரீத்’ மூலம் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு கடிகாரம் மதிப்புள்ளதா

தயாரிப்பு – லேசி கேட் புரொடக்ஷன்ஸ்இயக்கம் – சுனிஷ் குமார்இசை – கைலாஸ் மேனன்நடிப்பு – பரத், விவியா சன்த், அனுப் காலித்வெளியான தேதி – 5 ஆகஸ்ட் 2022நேரம் – 1 மணி நேரம் 41 நிமிடம்ரேட்டிங் – 2.25/5படத்தின் தலைப்பைப் பார்த்ததும் ஆங்கிலப் படம் என்று நினைத்துவிட வேண்டாம்.

‘டோன்ட் ப்ரீத்’ என்ற ஆங்கிலப் படத்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்ட படம் இது.அனுப் கலித், அடில் இப்ராகிம், அனு மோகன், விவியா சன்த் ஆகியோர் கொண்ட குழு மலைப் பிரதேசத்தில் தனிமையில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் சென்று கொள்ளை ஒன்றை நிகழ்த்த முடிவெடுக்கிறது. இதற்கு முன்பும் இப்படி சில கொள்ளைகளைச் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் குழு இது. அந்த வீட்டிற்குள் சென்றால் கண் பார்வையற்ற பரத் இருக்கிறார். தனது வீட்டிற்குள் கொள்ளையடிக்க நுழைந்துள்ளார்கள் என்பதை அறிந்த அவர் எதிர் தாக்குதலில் இறங்குகிறார்.

அவரது தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறுகிறது குழு. அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.ஒரு ஆங்கிலப் படத்தைக் காப்பியடித்திருந்தாலும் பரபரப்பான த்ரில்லர் படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சுனிஷ்குமார். ஆனால், இடைவேளை வரையிலான காட்சிகளில் பெரிதாக பரபரப்பு எதுவுமில்லை. அவர்கள் நிகழ்த்திய இரண்டு கொள்ளைகள்தான் காட்டப்படுகிறது.

பரத்தின் வீட்டிற்குள் நுழைந்தபின்தான் படம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.பார்வையற்ற ஒருவரால் இப்படியெல்லாம் தாக்க முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் அதை நம்பும்படி செய்திருக்கிறார் இயக்குனர். பரத்தின் உடல்வாகும், அவரது ஆக்ஷனும் அசத்தலாக உள்ளது. அவருக்கான பிளாஷ்பேக் காட்சிகள் அனுதாபத்தை வரவழைக்கும்.அனுப் காலித், அடில் இப்ராகிம், அனு மோகன் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஓரளவிற்கு நிறைவாக நடித்திருக்கிறார்கள். அதே சமயம் அவர்களுடைய குழுவில் ஒருவராக இருக்கும் விவியா கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறார்.

மலைப் பிரதேச வீடும், அதற்குள் நடக்கும் சம்பவங்களும்தான் படத்தின் ஹைலைட். அதிலும் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் முக்கியக் கதையே. அந்த இருட்டு நேரத்திற்குள் விதவிதமான லைட்டிங்குகளில் தனி கவனம் செலுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சினு சித்தார்த்.முதல் பாதி பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதி பரவாயில்லை. ஒரே இடத்தில் கதை நகர்வது கொஞ்சம் அலுப்படைய வைத்தாலும் பரத் தன் நடிப்பால் காப்பாற்றுகிறார். மினிமம் பட்ஜெட்டில் முயற்சி செய்திருக்கிறார்கள்.லாஸ்ட் 6 ஹவர்ஸ் – பொறுமை அவசியம்

மொத்தத்தில், ‘கடைசி ஆறு மணி நேரம்’ ‘மூச்சு விடாதே’ போல புத்திசாலித்தனமாக இருக்காது, ஆனால் அது நிச்சயமாக சிலிர்ப்பாக இருக்கும், மேலும் பயத்திலும் எதிர்பார்ப்பிலும் மூச்சு விட வைக்கிறது!

- Advertisement -

சமீபத்திய கதைகள்