அந்த ஒரு சீன்னால என் வாழ்க்கையே வீணாப் போச்சு.! கண்ணீர் மல்க நிற்கும் ‘இரவின் நிழல்’ பட நாயகி

எதிலும் புதுமையை புகுத்த விரும்பும் பார்த்திபன் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படத்தையும் ஒரே ஷார்ட்டில் எடுத்து வெற்றியும் கண்டிருக்கிறார்.

இதற்கு முன்னால் இவர் எடுத்து நடித்த ஒத்த செருப்பு படமும் தொழில்நுட்பரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற படமாக விளங்கியது.

இரவின் நிழல் படத்தில் நடிகை பிரிகிடா, ரேகா நாயர் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான படமாகும். படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.

படம் சிங்கிள் ஷார்ட்டில் எடுக்கப் படம் என்பது தெரிந்ததில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருந்தன.

படத்தை பார்த்த அனைவரும் நடிகர் பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த படத்தில் நடித்த நடிகை பிரிகிடா மட்டும் பார்த்திபனிடம் தன் வேதனையை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பிரிகிடா இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்த சிலெக்கம்மா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதற்கு முன் பவி டீச்சராக வேலன் படத்தில் நடித்திருப்பார். இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து என் வாழ்க்கையே வீணாப்போச்சு என பார்த்திபனிடம் கதறி அழுததாக பார்த்திபனே கூறியுள்ளார்.

ஆனால் அவரின் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்று பல இயக்குனர்கள் அவரை தேடி வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர் என பார்த்திபன் ஆறுதல் சொன்னதாக கூறினார்.

மேலும் பிரிகிடா பவி டீச்சர் என்ற ஒரு மரியாதையாவது இருந்தது ஆனால் இப்படி ஆகிவிட்டதே என வருத்தப்பட்டாராம். அதன் பின் பார்த்திபன் அவருக்கு ஆலோசனைகள் வழங்கியதாக கூறினார்.