இனி வரும் படங்களில் அறவே வேண்டாம்.! அஜித் எடுத்த அதிரடி முடிவு.!? ஏற்றுக்கொள்வார்களா ரசிகர்கள்.?

நடிகர் அஜித்குமார், தற்போது, வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய, எச்.வினோத் தான் இயக்குகிறார். பெயரிடாத பட இந்த படத்திற்கு, தற்காலிகமாக என்று AK61- என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, படக்குழு அப்டேட்டுகளை வெளியிடவுள்ளனர். இதற்கிடையில், அஜித் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளாராம்.

அது என்னவென்றால், இனிமேல் அஜித் நடிக்கும் படங்களில் தான் அதிகம் பஞ்ச் டயலாக் பேசமாட்டாராம். அதிலும் குறிப்பாக, அரசியல் வசனங்கள் இடம்பெறும் வசனங்களை பேசவே கூடாது என்று முடிவு எடுத்துள்ளாராம். அதைபோல், அஜித்தின் 62- வது படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன் 62 வது படத்தின் கதையை அஜித்திடம் கூறினாராம்.

அதில் சில அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்ததாம், உடனே அஜித் விக்னேஷ் சிவன் அரசியல் வசனங்கள் வேண்டாம், அதுயெல்லாம் நீக்கிவிட்டு, கதையை கொஞ்சம் மாற்றி கொண்டு வருமாறு கூறினாராம்.

இதனையடுத்து,இனிமேல் வரும் படங்களில் அஜித் பஞ்ச் டயலாக் பேசாமல் நடிப்பதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.