இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய வீடியோ !! செம்ம யங் லுக்கில் அஜித் !!

0
இணையத்தில் வைரலாகும் அஜித்தின் புதிய வீடியோ !!  செம்ம யங் லுக்கில் அஜித் !!

நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அஜித் ரசிகர்களே எதிர்பாராத ஒரு வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் என்பதும் அஜித்தின் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அஜித்தின் நெருங்கிய நண்பரும் பிரபல போட்டோகிராபருமான சிற்றரசு, அஜித் நடித்த ’பில்லா’ படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ’பில்லா’ படத்தின் படப்பிடிப்பு, இயக்குனர் விஷ்ணுவர்தன் படப்பிடிப்பு காட்சியை விளக்குவது உள்ளிட்ட சில காட்சிகள் உள்ளன.

அஜித் ரசிகர்களே எதிர்பார்க்காத இந்த வீடியோவை பார்த்து அவர்கள் மகிழ்ச்சி அடைந்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில், போனிகபுர் தயாரிப்பில் உருவாகும் ‘ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் புனேவில் தொடங்கவுள்ளது.

No posts to display