தளபதி-67 படத்தில் மொத்தம் எத்தனை வில்லன்கள் தெரியுமா ? கசிந்த உண்மை இதோ !!

0
தளபதி-67 படத்தில் மொத்தம் எத்தனை வில்லன்கள் தெரியுமா ? கசிந்த உண்மை இதோ !!

விஜயின் தளபதி-66 படமான வாரிசு படத்தின் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஐதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், சங்கீதா, யோகிபாபு உட்பட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியிம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு தன் அடுத்த படவேளையில் பிஸியாக இறங்க இருக்கிறார்.

தளபதி – 67 படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறிது காலம் சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு எடுப்பதாக தெரிவித்திருந்தார். அடுத்த படத்தின் புதிய அப்டேட்டுடன் சந்திக்கிறேன் என கூறி புதிய படத்தை இயக்குவதில் கவனம் செலுத்த இருப்பதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தளபதி – 67 படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் 6 வில்லன்கள் நடிக்க இருக்கின்றனராம். ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் பிரித்விராஜ், தெலுங்கு நடிகர் ஒருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இன்னும் 3 வில்லன்கள் கிடைமட்ட வில்லன்களாம். தேர்வு நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்தனர். மேலும் தளபதி – 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

No posts to display