அடுத்த மதுரை சம்பவம் லோடிங் !! இயக்குனர் சொன்ன சீக்ரெட்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

0
அடுத்த மதுரை சம்பவம் லோடிங் !! இயக்குனர் சொன்ன சீக்ரெட்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!

குருதி ஆட்டம்’, வெளியூர் கமர்ஷியல் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. அதர்வா முரளி மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை 8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு நேற்று ‘குருதி ஆட்டம்’ படக்குழுவினர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர்.

நடிகர் அஜித்திடம் பல இயக்குனர்கள் கதை சொல்லி அது அஜித்திற்கு பிடித்து விடும். அந்த வகையில், தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் எனும் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் கடந்த ஆண்டு அஜித்தை சந்தித்து மதுரையில் நடக்கும் சம்பவத்தை மையமாக வைத்து ஒரு கதை இருப்பதாக கூறினாராம்.

அந்த கதையை கேட்ட அஜித்தும் படத்திற்கு ஓகே என்று சொல்லிவிட்டதாகவும் செய்திகள் பரவி வந்தது. இதனை எடுத்து ஸ்ரீ கணேஷ் இயக்கிய குருதி ஆட்டம் திரைப்படம் நேற்று வெளியாகிய ரசிக்கும் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் அஜித் சம்மந்த பட்ட சில கட்சிகளும் ரேஃப்ரன்ஸ் -ஆக ஸ்ரீ கணேஷ் வைத்திருந்தார்.

இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் நிலையில், ஸ்ரீ கணேசனிடம் சமீபத்தில் அஜித்தை வைத்து படம் இயக்குகிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த ஸ்ரீ கணேஷ் அதை நானே சொல்ல முடியாது அவுங்க தரப்பில் இருந்து சொல்லுவாங்க என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் அதை இப்போ சொன்னால் சரியாக இருக்கிறது . அவர்களே சொல்வார்கள் என நழுவி உள்ளார். அவர் அஜித்தை வைத்து படம் இயக்கவில்லை என்றால் இல்லை என்று கூறியிருக்கலாம். ஆனால், இவர் இப்படி சொன்னது அஜித் ரசிகர்களுக்கு இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

No posts to display