அன்புச்செழியன் வீட்டில் இதுவரை நடந்த வருமான வரி சோதனை கணக்கில் வராத ரொக்க மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

0
அன்புச்செழியன் வீட்டில் இதுவரை நடந்த வருமான வரி சோதனை கணக்கில் வராத ரொக்க மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

கடந்த சில நாட்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர்கள் அன்புச்செழியன், கலைப்புலி தாணு, ஞானவேல்ராஜா, தியாகராஜன் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 4 நாட்களாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.200 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.36 கோடி மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் தியேட்டர் வருமானத்தை குறைத்து காண்பித்து பல கோடி வருமானத்தை மறைத்ததற்கான ஆவணங்கள், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்த கணக்கில் வராத கடன்கள், ரூ. 200 கோடி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் வெளியீட்டுள்ளனர்.

No posts to display