இயக்குனர் விக்கியிடம் அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா..?

0
இயக்குனர் விக்கியிடம் அஜித் கூறிய அந்த ஒரு வார்த்தை என்ன தெரியுமா..?

நடிகர் அஜித் குமார் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது 62-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை முடித்த பிறகு அஜித் அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிப்பதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளளார்.

அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருவதால், இயக்குனர் விக்னேஷ் சிவன் ak62 படத்தின் கதையை மெருகேற்றும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். விரைவில் படத்தின் முதல் பார்வை டைட்டிலுடன் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் விக்னேஷ் சிவனிடம் சொன்ன விஷயம் குறித்து விக்னேஷ் சமீபத்திய ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நாம் செய்யும் வேலையை எப்போதும் கொண்டாட வேண்டும் எனவும், ஒரு வேலையை செய்யும் அனைவரும் அந்த வேலையை உற்சாகமாக செய்தால் அந்த வேலை நிச்சயமாக வெற்றி பெற்றுவிடும்.

ஒரு படமாக இருந்தாலும் சரி அதில் வேலை செய்யும் தடை நில ஊழியர்களாக இருந்தாலும் அது தனது படம் என்று உற்சாகமாக செய்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அஜித் சொன்னதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

No posts to display