Thursday, November 30, 2023 5:16 pm

வைபவ் நடித்த காட்டேரி படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள தமிழ் படங்கள்!

இந்தாண்டு நடைபெறும் 21வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அயோத்தி,...

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் : ரசிகர்கள் கொண்டாட்டம்

நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' நாளை (டிசம்பர் 1) திரையரங்குகளில் ரிலீசாகிறது....

கள்ளி பால்ல ஒரு டீ படத்தின் ட்ரைலர் இதோ !

கல்லி பால் லா ஒரு டீ என்ற பெயரில் பா.ரஞ்சித் ஒரு...

ஜி.வி.பிரகாஷின் ரெபலின் முதல் சிங்கிள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

நிகேஷ் ஆர்.எஸ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரெபெல் படத்தின் முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நீண்ட நாட்களாக தாமதமாகி வந்த வைபவ் நடித்த கட்டேரி படத்தின் ரிலீஸ் தேதி கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 5ம் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.ஆல்சோ ஸ்டேரிங் சோனம் பஜிவா, ஆத்மீக, கருணாகரன், அண்ட் வரலட்சுமி சரத்குமார், தி பிலிம் இஸ் டிரெசிடெட் பய தீக்காய ஓபி கவலை வேண்டாம் அண்ட் யாமிருக்க பயமெய் பாமே.

நைனா எனும் டானிடம் தன்னையும் தனது நண்பர்களையும் சிக்கவிட்டு, தங்க புதையலை தேடி செல்லும் தங்களுடைய கூட்டாளி ஒருவனை தேடி, நண்பர்கள் மற்றும் மனைவியுடன் செல்கிறார் கதாநாயகன் வைபவ். பயணத்தில் ஒரு கிராமத்தை அடையும் வைபவ், தனது கூட்டாளியின் புகைப்படத்தை காட்டி ஒரு வீட்டில் விசாரிக்கிறார்.

அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே மரணமடைந்து பேய்யாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இதன்பின், எப்படியாவது இந்த கிராமத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்று என்னும் வைபவுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருந்தது.

ஆம், இந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால், மீண்டும் அதே கிராமத்துக்கு வந்து அடைவதுபோல் அமானுஷம் அமைந்துள்ளது. இதிலிருந்து வைபவ் தனது நண்பர்கள் மற்றும் மனைவியுடன் தப்பித்தாரா? இல்லையா? இறுதியில் புதையல் கிடைத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..

நகைச்சுவை, பயம் என ஓரளவு சிறப்பாக நடித்துள்ளார் வைபவ். கதாநாயகிகளாக வரும் சோனம் பாஜ்வா மற்றும் ஆத்மீகா இருவரின் நடிப்பு பெரிதாக திரையில் தெரியவில்லை. காமெடியன்ஸ் கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபியின் நகைச்சுவைக்கு சிரிப்பு வரவில்லை. பேய்யாக வரும் வரலக்ஷ்மி சரத்குமாரின் நடிப்பு போர் அடிக்கிறது.

மற்றபடி ஜான் விஜய், மைம் கோபி, லல்லு சபா மனோகர், பொன்னம்பலம் என அனைவரின் கதாபாத்திரமும் சொல்லும் அளவிற்க்கு வலுவாக இல்லை. யாமிருக்கே பயமேன் எனும் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் டிகே, காட்டேரியில் சற்று சறுக்கலை சந்தித்துள்ளார். நகைச்சுவை, திகில் என இரண்டும் எடுபடவில்லை.

இதுவே திரைக்கதைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே பல முறை பார்த்து சலித்துப்போன அதே கதைக்களம். இனிமேல் பேய்யே நேரில் வந்து, இப்படி படம் எடுக்காதீர்கள் என்று கூறினாலும் ஆசிரியப்படுவதற்கு இல்லை. எஸ்.என். பிரசாத்தின் ம்யூசிக் ஓகே. பிரவீன் கே.எல் எடிட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை. பி.எஸ். வினோத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓரளவு பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துள்ளது.

க்ளாப்ஸ் ஒளிப்பதிவு பல்ப்ஸ் இயக்கம், திரைக்கதை எடுபடாத நகைச்சுவை சலித்துபோன கதைக்களம்
காட்டேரி ஒர்கவுட் ஆகாத திகில் காட்சிகள்

மொத்தத்தில் மாபெரும் சொதப்பல் இந்த காட்டேரி

கட்டேரி பிரசாத் எஸ்.என் இசையமைக்க, விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டர். கே.இ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் இப்படத்தை வழங்குகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்