Saturday, April 20, 2024 1:51 pm

உண்மையிலேயே நீரிழிவு நோயாளிகள் பலா பழத்தை சாப்பிடலாமா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பலாப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதில் புரதச்சத்துக்களும், மாவுச்சத்துக்களும், வைட்டமின்களும் அதிகம் காணப்படுகின்றன.

அதே சமயம் பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் சில பக்கவிளைவுகள் ஏற்படும்.பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.

பலாப்பழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும்.

பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

பழுத்த மற்றும் பழுக்காத பலாப்பழங்கள் இரண்டும் முக்கிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்களைக் கொண்டுள்ளன. இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல வழிகளில் உதவும்.

இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் பலாப்பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பச்சை பலாப்பழம் குளுக்கோஸ் குறைக்கும் ஆற்றல் வாய்ந்த விளைவைக் கொண்டுள்ளது. அதிக அளவில் உட்கொண்டால், அது சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம், குறிப்பாக சில நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளுடன் உட்கொண்டால் மற்றும் இரத்தச் சர்க்கரை குறைவை ஏற்படுத்தலாம்.

பலாப்பழம் பழுத்தவுடன், பழத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் மற்றும் மாவுச்சத்து அதிகரிக்கும். இது அதிக அளவு உட்கொண்டால் நீரிழிவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பலாப்பழம் மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது – அதிக அளவில் உட்கொண்டால், அது சர்க்கரை அளவைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரிக்கலாம்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்