Sunday, April 2, 2023

AK 61 கண்டிப்பா பிளாக்பஸ்டர் ஆகும், உறுதி செய்த அஜித் செண்டிமெண்டஇதோ !!

தொடர்புடைய கதைகள்

மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக வெளி மாநில குண்டர்களை பாஜக வேலைக்கு அமர்த்துகிறது

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ராம நவமி ஊர்வலத்தின் போது...

புதிய கால்பந்து அணி தயார் நாய்கள் கூட்டமாக விளையாடும் வீடியோ வைரல் !

நாய்கள் மகிழ்ச்சியின் நான்கு கால் நடைபாதைகள், அவை மனிதர்களைப் பாதுகாக்கின்றன, நம்மைக்...

ரோகினி தியேட்டர் விவகாரம் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்

ரோகினி திரையரங்கில் சிலம்பரசனின் சமீபத்திய வெளியீடான பாத்து தாலா திரையிடலுக்கு பழங்குடியின...

‘ரிப் மேகி’: வினோதமான நூடுல் ஐஸ்கிரீமுக்கு நெட்டிசன்கள் ட்ரோல் !

நூடுல்ஸுடன் ஐஸ்கிரீமின் வினோதமான இணைவு இணையத்தில் வலம் வருகிறது. வேகவைத்த நூடுல்ஸ்...

எம்எஸ்டி தோனி பிராவோவுக்கு விசில் அடிக்க கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரல் !

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16வது சீசன் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது.முதல்...

நடிகர் அஜித் குமார் தனது சினிமா வாழ்க்கையில் 3 தசாப்தங்களை நிறைவு செய்துள்ள நிலையில், ரசிகர்களும் பிரபலங்களும் நட்சத்திர நடிகரைக் கொண்டாடும் வகையில் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்துக்கு பின்பு போனி கபூர் தயாரிப்பில், H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார் அஜித். இந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். ஆனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு லாபத்தை பெற்று தந்தது. நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணியில் மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

இதற்கு காரணம் இயக்குனர் H.வினோத் மீது அஜித் வைத்த நம்பிக்கை தான் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இங்கிலீஷ் வெங்கிலிஷ் படத்தில் நடிகை ஸ்ரீதேவி உடன் அஜித் நடித்த போது, ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் உடன் ஏற்பட்ட நட்பு தான் அவருடைய தயாரிப்பில் அஜித் நடிக்கும் அளவுக்கு கொண்டு சென்றது. வலிமை படம் மிகுந்த எதிர்பார்ப்பில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் கொரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்பு தடை பெற்றது.

சுமார் இரண்டு வருட அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்பு வெளியான படம் வலிமை. மேலும் இந்த படம் குறித்து இடைப்பட்ட இரண்டு வருடத்தில் எந்த ஒரு அப்டேட் இல்லாததால், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு தொடர்ந்து ட்ரென்ட் செய்து கொண்டே இருந்தனர். இப்படி அஜித் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான வலிமை படம் வசூல் ரிதியாக ஓரளவு வரவேற்பை பெற்றாலும், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதனை தொடர்ந்து, வலிமை படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்வதற்காக, மீண்டும் அதே படத்தின் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கால்சீட் கொடுத்தார். அஜித் தனக்கு நெருக்கமான இயக்குனர் தோல்வி அடைந்தால் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விடும் பழக்கம் கொண்டவர், அந்த வகையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படம் தோல்விக்கு பின்பு மீண்டும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்து விஸ்வாசம் படத்தில் தூக்கி விட்டார்.

அதே போன்று வலிமை தோல்விக்கு பின்பு, அந்த படத்தின் இயக்குனர் H.வினோத்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்து, தற்பொழுது AK 61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதை மக்களிடம் தனியார் வங்கிகள் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பது தான் என்றும், மேலும் படத்தில் வங்கியை கொள்ளையடிப்பது போன்ற காட்சிகளும் படமாக்க பட்டு வருதாகவும், இதற்க்கு இரவு நேர படப்பிடிப்பு தான் சரியான நேரம் என்பதால்.

இரவு 2 மணி வரை படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் படப்பிடிப்பு இரவு இரண்டு மணி வரை படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படி சுமார் 15 நாட்கள் வரை நடந்த படப்பிப்பில், முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளார் நடிகர் அஜித்குமார். இந்த படத்தில் கடன் வாங்கியவர்களிடம், கடன் கொடுத்த வாங்கி ஊழியர்கள் மிக கொடூரமாக நடந்து கொண்டு வசூல் செய்யும் காட்சிகள் மனதை உருக்குவது போன்று அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இயக்குனர் H.வினோத் தனது தாய் கடன் வாங்கி அந்த கடனை அடைக்க முடியாமல் பட்ட கஷ்டத்தையும், மேலும் கடன் காரர்கள் கடனை வசூலிக்க தனது தாயிடம் இரக்கமில்லாமல் நடந்து கொண்ட சம்பவங்களை மையமாக கொன்டு, இயக்குனர் H.வினோத் தனது தாய்க்கு நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இந்த படத்தின் கதையை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இயக்கிய பிரமாண்டமான செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா. இந்த இளம் இயக்குனருக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் திரையுலகினர் அனைவரின் பாராட்டுக்களும் கிடைத்தன.

சமீபத்திய கதைகள்