Tuesday, September 26, 2023 2:50 pm

அஜித்தை மிரட்டினாரா அன்புச் செழியன் !! உண்மையிலயே அன்று நடந்து என்ன தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

புதிய தோற்றம் குறித்த ரசிகரின் விமர்சனம் : நடிகை எமி ஜாக்சன் பதிலடி

நடிகை எமி ஜாக்சனின் புதிய தோற்றத்தை ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி...

சூப்பர்ஸ்டார் ரஜினியின் காலில் விழுந்த நடிகர் ராகவா லாரன்ஸ்

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகியுள்ள...

தமிழக முதல்வருடனான திடீர் சந்திப்பு குறித்து ரோபோ சங்கரின் மனைவி விளக்கம்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த...

‘தளபதி 68’ படத்தின் பூஜை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ !

தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி இந்திய அளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் பங்கேற்றார். நடிகர் அஜித்குமார் திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலாக பரவியது. தற்போது, ​​47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அஜித் ஆறு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது லேட்டஸ்ட் அப்டேட். அங்கு நடந்த போட்டியில் அஜித்குமார் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார்.

இந்நிலையில் வருமான வரி துறையில் அன்பு செழியன் சிக்கியுள்ளது, அடுத்தடுத்து தமிழ் படங்கள் வெளியாகுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்புச்செழியன் முடங்கினால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் முடங்கிவிடும் என்கின்ற அச்சமும் சினிமா துறையினர் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் நீண்ட வருடங்களுக்கு முன்பு அன்புச்செழியன் – அஜித்குமார் இடையில் நடந்த மோதல் சம்பவம் ஒன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித்குமார். அதற்கான அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டு, இந்த படத்தில் நடிப்பதற்காக நீண்ட தலை முடி வளர்த்து அதற்கான போட்டோ சூட் அஜித்தை வைத்து எடுக்கப்பட்டது. ஆனால் அஜித்துக்கு தெரியாமலே இந்தப் படத்தில் திடீரென்று அஜித்துக்கு பதிலாக ஆர்யாவை உள்ளே கொண்டு வந்துள்ளார் இயக்குனர் பாலா.

நான் கடவுள் படத்திற்கு பைனான்ஸ் செய்திருந்தவர் அன்புசெழியன், இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் உள்ள ஒரு அறையில் அஜித்தை நடுவில் அமர வைத்து, அன்புசெழியன் உட்பட சிலர் அஜித்தை சுற்றி வளைத்து அமர்ந்து பஞ்சாயத்து செய்துள்ளனர். இதில் இயக்குனர் பாலாவும் இருந்ததாக கூறப்படுகிறது. நான் கடவுள் படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பி தரவேண்டும் என அன்பு செழியன் கேட்டுள்ளார்.

இதற்கு அஜித், நான் இந்த படத்தில் நடிக்க தயாராகத்தான் இருந்தேன். எனக்கே தெரியாமல் தான் வேறு ஒரு நடிகரை இந்த படத்தின் உள்ளே வந்துள்ளார். அதனால் என் மீது எந்த தவறும் கிடையாது. இருந்தும் நான் வாங்கிய அட்வான்ஸ் தொகையை உங்களுக்கு திருப்பி தருகிறேன். ஆனால் வட்டியுடன் திருப்பி தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அஜித்.

பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில், வட்டியுடன் திருப்பி தந்தே ஆக வேண்டும் என அன்பு செழியன் மிரட்டியுள்ளார். கோபத்தில் எழுந்த அஜித் அங்கே இருந்த சேரை எட்டி உதைத்து, வாங்கிய அட்வான்ஸ் தொகையை இன்று இரவுக்குள் திருப்பி தருகிறேன். வட்டியுடன் திருப்பி தரமுடியாது, உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார் அஜித்குமார்.

இதன் பின்பு அன்று இரவோடு இரவாக பணத்தை தயார் செய்து சமபந்தப்பட்டவர்களிடம், வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துள்ளார் அஜித் குமார் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அஜித் தாக்கப்பட்டார் என தகவல் வெளியான நிலையில், அதில் உண்மையில்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்