விஜய் ஓகே என்றாலும் அஜித் இதற்கு ஒத்துக்கவே மாட்டார்….! பிரபல தயாரிப்பாளர் கூறிய உண்மை !!

0
விஜய் ஓகே என்றாலும் அஜித் இதற்கு ஒத்துக்கவே மாட்டார்….! பிரபல தயாரிப்பாளர் கூறிய உண்மை !!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய். ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர்கள் ஒரு படத்தில் தான் சேர்ந்து நடித்தார்கள். ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் சேர்ந்து நடித்த இவர்கள் அதன் பின் கூட்டணி அமைக்க வில்லை.

இவர்களை எப்படியாவது இணைத்து விடவேண்டும் என்று பல இயக்குனர்கள் முயற்சித்து வருகிறார்கள். ஆனால் இன்று வரை அது நடக்காமலே இருக்கின்றது. மேலும் ரஜினி கமல் கூட சேர்ந்து இரண்டு மூன்று படங்களில் நடித்திருக்கின்றனர். ஆனால் இவர்களை இணைப்பதே பெரும் சவாலாகவே இருக்கின்றது.

இதன் பின்னனியில் இருக்கும் காரணங்களை பிரபல சினிமா தயாரிப்பாளர் தன் நேர்காணலின் போது கூறியுள்ளார். அவர் கூறியதாவது: விஜய் – அஜித் இணைய விஜய் கூட சம்மதம் தெரிவிப்பார். துணிந்து நடிக்க வந்து விடுவார். ஆனால் அஜித் ஒத்துக்கவே மாட்டார். ஏன்னு கேட்டால் விஜய் எல்லாரிடமும் நல்ல பழகும் மனமுடையவர். மக்களை சந்திக்க கூடியவர்.

ஆனால் அஜித் யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். மக்களை சந்திக்க மாட்டார். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார். அவரை யாரும் கேட்க முடியாது. அவரே ராஜா அவரே மந்திரி. ஆனால் ரசிகர்களும் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதையும் மீறி அஜித் ரசிகர்களை மக்களை சந்தித்தால் இன்னும் பெரிய லெவலில் வர வாய்ப்பு இருக்கிறது . இப்படி இருக்கும் அஜித் விஜயுடன் இணைய கூடிய சீக்கிரம் ஒத்துக்க மாட்டார் என கூறினார்.

No posts to display