Thursday, November 30, 2023 4:18 pm

காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் உண்டாகும் அதிசயம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் கிடைக்கும் ஆச்சரிய நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

உடல் வெப்பம் அதிகம் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உஷ்ணம் உடையும்.

வெந்தயத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் வெந்தயம் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வர வாய்ப்பு இல்லை.

வெந்தயத்தில் உள்ள அமினோ ஆசிட், இன்சுலின் உற்பத்தியைத் தூண்டும். எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

வெந்தயத்தில் கரையும் நார்ச்சத்து இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

வெந்தயத்திற்கு உடல் எடையைக் குறைக்கும் திறன் உள்ளது. மேலும் இதனை சாப்பிடுவதால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பி, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுத்து, உடல் எடை குறைய உதவும்.

வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது. எனவே கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும்.

பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.

வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்