ஒரே வாரத்தில் உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இத பண்ணுங்க போதும்

0
ஒரே வாரத்தில் உடல் எடையை சட்டுனு குறைக்கணுமா? இத பண்ணுங்க போதும்

ஊறவைத்த வால்நட் நன்மைகள்: உடல் எடை அதிகரிப்பது அனைவருக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது.

தொப்பை மற்றும் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்ந்தால், அதை அகற்றுவது மிகவும் கடினமாகி விடுகிறது. இதை சரி செய்ய, உங்கள் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களில் மாற்றங்களைச் செய்வது முக்கியமாகும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ் கூறுகையில், வாதுமை கொட்டைகள் அதாவது வால்நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால், உடல் பருமனுடன், இன்னும் பல பிரச்சனைகளும் விலகும் என்று கூறியுள்ளார். உலர் பழமான வால்நட்சில் உள்ள நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஊட்டச்சத்துகளின் இருப்பிடம் வால்நட்

உலர் பழங்களை
நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் அதாவது மூல இடம் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் வால்நட்ஸுக்கும் மிக முக்கியமான இட உள்ளது. இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

தினமும் ஒரு கைப்பிடி வால்நட் சாப்பிடுவது உடலின் பல பிரச்சனைகளை சமாளிக்கும். இது உடலுக்கும் மனதுக்கும் ஒரு ஆரோக்கியமான மருந்தாக செயல்படுகிறது. இது புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் வளமான மூலமாகும். இது தவிர, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவையும் வாதுமை கொட்டைகளில் காணப்படுகின்றன. தினமும் 2 முதல் 3 ஊறவைத்த அக்ரூட் பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே காணலாம்.

கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் புரதத்தின் அளவு அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் காணப்படுகின்றன.

2. நீரிழிவு நோயில் பயனுள்ளதாக இருக்கும்

தற்போதைய காலகட்டத்தில், நீரிழிவு ஒரு தீவிர பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு, ஆரோக்கியமான உணவு இதை கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த வழியாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், தினமும் 2-3 ஊறவைத்த அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது எளிதாகிறது.

3. செரிமானம் சரியாகும்

அஜீரணம்
, வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் காலையில் ஊறவைத்த அக்ரூட் பருப்பை சாப்பிட வேண்டும். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான அமைப்பு சரியாக இருக்கும்.

4. எலும்புகள் வலுவாக இருக்கும்

வால்நட் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கும் உலர் பழங்களில் ஒன்றாகும். இதில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் காணப்படுகிறது. இதன் மூலம் நமது உடலின் எலும்புகள் வலுவடையும். அதனால்தான் வாதுமை கொட்டை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Baldness & Hair Fall: வழுக்கையை போக்கும் ‘சில’ அற்புத எண்ணெய்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

No posts to display