கெஞ்சும் வினோத் செவி சாய்ப்பரா அஜித் !!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !!இது மட்டும் நடந்தால்

0
கெஞ்சும் வினோத் செவி சாய்ப்பரா அஜித் !!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !!இது மட்டும் நடந்தால்

இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘AK61’ படத்தின் செட்டில் இணையவுள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கியமான கேரக்டருக்காக இப்படத்தின் நடிகர்களுடன் இணைவதாக சமீபத்திய சலசலப்பு.

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்குமார் – இயக்குனர் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்துள்ள திரைப்படம் AK61 (அஜித்தின் 61வது திரைப்படம்) இன்னும் இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முந்தைய இரு படங்களைப் போல் இல்லாமல் இது முழுக்க முழுக்க இயக்குனர் வினோத் திரைப்படமாக உருவாகி வருகிறது. என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆதலால், இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

வங்கி கொள்ளையை மையப்படுத்தி அதில் நடக்கும் மோசடிகளையும் குறிப்பிட்டு இந்த திரைப்படத்தை வினோத் தனது சதுரங்க வேட்டை, தீரன் பட பானில் தனது பாணியில் உருவாக்கியுள்ளாராம்.

இந்த படத்தை பார்த்தவர்கள் அல்லது அதனுடன் பயணித்து வருபவர்கள் கூறுவது என்னவென்றால், இந்த திரைப்படம் அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெறித்தனமான ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் போல நல்ல வெற்றியை கொடுக்கும். அந்த அளவுக்கு இதில் வினோத் கடுமையாக உழைத்து உள்ளார் என்று கூறி வருகின்றனர்.

ஆனால், விக்ரம் திரைப்படத்திற்கு கதாநாயகன் தயாரிப்பாளர் கமல்ஹாசன் பெரும்பாலும் இந்தியா முழுக்க ஏன் உலகம் முழுக்க கூட சுற்றி தனது படத்திற்காக பிரமோஷனில் ஈடுபட்டார். ஆனால், அந்த அளவுக்கான விளம்பரம் அஜித் படத்திற்கு இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகமே. அதிலும் குறிப்பாக அஜித் எந்தவிதமான பட விளம்பர நிகழ்ச்சிகளும் கலந்து கொள்ள மாட்டார். இது படத்தின் விளம்பரத்திற்கு சற்று சாறுகளாக அமையும். தமிழில் நமக்கு தெரிந்த கதைதான். ஆனால் அயல் மாநிலத்தில் அஜித்தின் வருகை மிக முக்கியம். அதுவும் நிறைவேறிவிட்டால் நிச்சயம் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்பதில் எந்தவி சந்தேகமும் இல்லை.

இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜீத் தொடர்ந்து மூன்றாவது படம். நடிகர் அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில், ‘ஏகே 61’ படத்தில் நீண்ட தாடியுடன் நடிப்பார். ‘ஏகே 61’ படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், போஸ்டரில் படத்தின் வெளியீட்டு தேதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display