அஜித் நிராகரித்த கதையில் விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் அதுவும் இந்த படமா ?

0
அஜித்  நிராகரித்த கதையில் விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் அதுவும் இந்த படமா ?

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித். இரண்டு பேருமே ஒரே காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து தங்கள் சாம்ராஜ்யங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

இவர்களின் படங்களின் ரிலீஸ் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி , பொங்கல் மாதிரியான பண்டிகைகள் தான். பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்துவார்கள்.

மேலும் இவர்களுக்குள் போட்டி இருக்கிறதோ இல்லையோ ஆனால் இவர்களின் ரசிகர்களுக்குள் இருக்கும் போட்டியால் ஒட்டு மொத்த இணையமே தெறித்து ஓடும் அளவிற்கு சண்டை போட்டுக் கொண்வார்கள். இந்த நிலையில் விஜயின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறிய திருமலை படத்தின் இயக்குனர் ரமணா அந்த படத்தின் வெற்றியை குறித்தும் நடிகர் அஜித்தை பற்றியும் பேசியுள்ளார்.

திருமலை படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நடிகர் அஜித்தானாம். ஆனால் அவருக்கு இருக்கும் அப்போதைய பலத்தால் அவரிடம் அணுக முடியவில்லையாம். படம் வெளியாகி வெற்றியும் பெற்று படத்தை பார்த்து அஜித் ரமணாவை அழைத்து மிகவும் பாராட்டினாராம். அதற்கு ரமணா இந்த படத்தில் நடிக்க வேண்டியதே நீங்கள் தான் என்று கூறியவுடன் அஜித் ஆச்சரியப்பட்டாராம். படத்தில் மெக்கானிக், பைக் ரேஸ், நண்பர்களை விட்டுக் கொடுக்காத மனப்பான்மை இதெல்லாம் உங்கள் பண்புதான் என்று ரமணா கூறியதும் அஜித் அப்படியா என்று கேட்டுவிட்டு இயக்குனரை வாழ்த்தினாராம்.

No posts to display