அஜித் 62 பட இயக்குனரின் பலே திட்டம், ஆச்சர்யத்தில் திரையுலகம் |

0
அஜித் 62 பட  இயக்குனரின் பலே திட்டம், ஆச்சர்யத்தில் திரையுலகம் |

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் குமாரின் ‘AK62’ படம் இந்த வருடமே திரைக்கு வரவுள்ளது என்பது தெரிந்ததே. இப்போது, ​​சமீபத்திய விஷயம் என்னவென்றால், தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ள அவரது தற்போதைய படமான ‘ஏகே 61’ வெளியாவதற்கு முன்பே படம் தொடங்க வாய்ப்புள்ளது.

அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் அவரது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வங்கி கொள்ளைய மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.இப்படத்தின் ரிலீஸ் முதலில் தீபாவளி என கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்பட ரிலீஸ் டிசம்பர் ஆகும் என கூறப்படுகிறது. ஆதலால் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அஜித்தின் 62 வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் முதலில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் முடிந்த பிறகு அந்த முடிவு மாறியதாக கூறப்படுகிறது. அதாவது நயன்தாரா வேண்டாம் வேறு நடிகை ஒப்பந்தம் செய்யலாம் என்று விக்னேஷ் சிவன் முடிவு எடுத்துள்ளாராம்.அதுவும் அந்த ஹீரோயின் யார் என்றால் சமந்தா என்கிறது சினிமா வட்டாரம். ஆம், சமந்தா தான் அஜித்தின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். அஜித்தின் 61 வது திரைப்படம் முடிந்த பிறகு தான் 62 வது திரைப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வரும் என கூறப்படுகிறது.

நடிகர் அஜித் அவர்கள் மூன்றாவது படமான வினோத்துடன் #AK61 படத்தை முடித்த பிறகு ஐரோப்பாவில் ஒரு சாலைப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளதாக நாங்கள் முன்பே தெரிவித்திருந்தோம். இதற்கிடையில், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது போல் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கலாம் என்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அஜித்தின் ‘ஏகே62’ படத்தில் தான் இல்லை என மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

No posts to display