ஜேடி ஜெர்ரி இயக்கிய அறிவியல் புனைகதை தமிழ் திரைப்படமான ‘தி லெஜண்ட்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் நடிப்பில் அறிமுகமான சரவணன் அருள் மற்றும் கோலிவுட்டில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக், யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா, ரோபோ சங்கர், மயில்சாமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
‘தி லெஜண்ட்’ படம் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 2 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இவர் எப்படி நடிப்பார், படம் நன்றாக ஓடுமா என பல கேள்வி மக்களிடம் இருந்தது, அதற்கு எல்லாம் பதில் கொடுத்து வருகிறது படம்.
ஆமாம் படத்திற்கு நல்ல விமர்சனம் வர வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.பல கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ. 7 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.
சந்தானம் நடித்த குளு குளு பட வசூலை 1 கோடி முந்தியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
‘தி லெஜண்ட்’ ஒரு பெரிய பட்ஜெட் படம் மற்றும் அதை சரவணன் அருள் தனது ஹோம் பேனரில் தயாரித்துள்ளார். தொழிலதிபராக இருந்து நடிகராக மாறிய அவர் தனது திரைப்படத்தை உலகம் முழுவதும் 2500 திரைகளில் வெளியிட்டார்;
அதில் 650 திரைகள் தமிழ்நாட்டில் இருந்தன. இப்படம் ரூ.45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாக்ஸ் ஆபிஸில் ரூ.65 கோடி வசூல் செய்து சாதனை படைத்தால், வெற்றி பெற்றதாக கருதப்படும் என்றும் கூறப்படுகிறது.