தளபதி விஜய்க்கு விபூதி அடித்த வெற்றிமாறன் !! கதறும் தளபதி ரசிகர்கள் !!

0
தளபதி விஜய்க்கு விபூதி அடித்த வெற்றிமாறன் !! கதறும்  தளபதி  ரசிகர்கள் !!

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்களில் தனுஷுடன் ஜோடி சேர்ந்த இயக்குனர் வெற்றி மாறன் மீண்டும் நடிகருடன் இணைந்து பணியாற்றவுள்ளார். பல பிரபலங்கள் கலந்து கொண்ட தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, ​​வெற்றி மாறனிடம் வட சென்னை 2 படத்தின் வேலைகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இயக்குனர் தனது வரவிருக்கும் படங்களுக்குப் பிறகு தனுஷுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என்று கூறினார், இருப்பினும் இது அவர்களின் வெற்றி 2018 திரைப்படமான வட சென்னையின் தொடர்ச்சியா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை.

தமிழ் சினிமாவில் அதிகம் தேடப்பட்டு வரும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் படங்களில் ஒரு திரைப்படத்திலாவது நடித்து விட மாட்டோமா என்று பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரை பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், கதைக்காக தான் ஹீரோவே தவிர ஹீரோவுக்காக கதை இல்லை என்பதை சரியாக புரிந்து கொண்டு அதற்கான வேலையை செய்து வருகிறார் வெற்றிமாறன்.

அவர் இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது முடிந்தவுடன் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

விடுதலை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு இந்த வருட கடைசி ஆகி விடும். அதன் பிறகு வாடிவாசல் ஆரம்பித்து அது கிட்டத்தட்ட இரண்டு வருடம் ஆகும் என்கிறார்கள் சினிமாவாசிகள்.

இதற்கிடையில் வெற்றிமாறன் சூர்யா படத்தை இயக்கியவுடன் அடுத்ததாக விஜய் படத்தை தான் இயக்குவார் என்று பெரிதும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதையும் ஒரு சில பேட்டிகளில் அவரே குறிப்பிட்டு இருந்தார். என்னுடைய படங்கள் முடிந்தவுடன் நான் விஜய் வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், சமீபத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது ரசிகர்கள் வடசென்னை-2 எப்போது என கேட்கவே, உடனே, விடுதலை மற்றும் வாடிவாசல் முடிந்தவுடன் அடுத்து உடனே தனுஷ் (வடசென்னை இரண்டாம் பாகம்) உடன் தான் என்று தெளிவாக கூறிவிட்டார்.

இதனை கேட்ட விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகிவிட்டனர். வாடிவாசல் முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்த்தால், மீண்டும் தனது ஆஸ்தானம் நடிகர் பக்கம் போய்விட்டார் வெற்றிமாறன் என்று கூறி புலம்பி வருகின்றனர்.

இதற்கிடையில், தனுஷிடம் நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்கள் பல்வேறு கட்டத் தயாரிப்பில் உள்ளன. மறுபுறம், வெற்றியின் வரவிருக்கும் திட்டங்களில் விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகியவை அடங்கும்.

No posts to display