கண்டிப்பாக அந்த பேரு மாறணும்!.. அஜித் 61 படத்துக்கு பக்காவா ஸ்கெட்ச் போடும் ஹெச்.வினோத்

0
கண்டிப்பாக அந்த  பேரு மாறணும்!.. அஜித் 61 படத்துக்கு பக்காவா ஸ்கெட்ச் போடும் ஹெச்.வினோத்

47வது மாநில படப்பிடிப்பு போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்துள்ள நடிகர் அஜித்குமார், விரைவில் இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘AK61’ படத்தின் செட்டில் இணையவுள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கியமான கேரக்டருக்காக இப்படத்தின் நடிகர்களுடன் இணைவதாக சமீபத்திய சலசலப்பு.


போனிகபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தாலும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. ஹெச்.வினோத்தின் முந்தையை படங்களில் இருந்த திரைக்கதையின் வீரியம் வலிமை படத்தில் இல்லை. இப்படத்தை அவர்தான் இயக்கினாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும், அஜித் கூறிய ஒருவரிக்கதையைத்தான் வினோத் டெவலப் செய்து படமாக எடுத்தார் எனவும் செய்திகள் வெளியானது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இப்படம் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே கொடுத்துள்ளதாக உண்மை நிலவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவுள்ளார். இது அவரின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் பில்லா மற்றும் மங்காத்தா படத்தில் வந்தது போல் நெகட்டிவ் வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். மேலும், ஹீரோ வேடத்தில் அஜித் என இரட்டை வேடம் எனக்கூறப்படுகிறது.

ஏற்கனவே வலிமை படத்தில் கோட்டை விட்டதால் கதை, திரைக்கதையில் முழுக்கவனம் செலுத்தி வருகிறாராம் ஹெச்.வினோத். அதிலும் நெகட்டிவ் வேடத்தில் வரும் அஜித்துக்கு அசத்தலான காட்சிகளை அவர் எழுதி வருகிறாராம். மணி ஹீஸ்ட் வெப் சீரியஸ் போல, மிகவும் திறமையாக திட்டமிட்டு வங்கி கொள்ளைகளில் ஈடுபடும் வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளாராம்.

எனவே, பில்லா, மங்காத்தா படங்களுக்கு பின் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அஜித் கெட்டப் தொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display