Friday, March 8, 2024 7:38 am

அருண்விஜய் நடித்த ‘பார்டர்’ படத்தின் ரீலிஸ் தேதியை பற்றிய முக்கிய அப்டேட் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய பார்டர் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது.

பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரமான விக்டர் அவருக்கு வெகுவாகப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது.

இதையடுத்து குற்றம் 23 என்ற வெற்றிப்படம் கொடுத்த அருண் விஜய் – அறிவழகன் கூட்டணி மீண்டும் ‘பார்டர்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் கடந்த ஆண்டே முடிந்தாலும், கொரோனா தொற்று மற்றும் பைனான்ஸ் பிரச்சனைகளால் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து அருண் விஜய்யின் யானை திரைப்படம் ரிலீஸாகி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்போது பார்டர் திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அந்த தேதியில் ரிலீஸ் ஆக இருந்த விருமன் திரைப்படம் முன் தள்ளிப் போனதால் இப்போது அந்த தேதியில் பார்டர் திரைப்படம் ரிலீஸாக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுவருவதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்