ஒரு வழியாக வெளியான ஏகே61 படத்தின் பர்ஸ்ட் லுக் பற்றிய அப்டேட் !! ரசிகர்கள் அதிர்ச்சி

0
ஒரு வழியாக வெளியான ஏகே61 படத்தின்  பர்ஸ்ட் லுக்  பற்றிய அப்டேட் !! ரசிகர்கள் அதிர்ச்சி

47வது மாநில படப்பிடிப்பு போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்துள்ள நடிகர் அஜித்குமார், விரைவில் இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நடிக்கவிருக்கும் ‘ஏகே61’ படத்தின் செட்டில் இணையவுள்ளார். இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் மூத்த நடிகர் சஞ்சய் தத் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக இப்படத்தின் நடிகர்களுடன் இணைவதாக சமீபத்திய சலசலப்பு.

நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளது.வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பூனாவில் துவங்கி நடைபெறவுள்ளது.இந்தப் படத்தில் அஜித் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு கெட்டப்புகளில் மிரட்டவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியிடப்படவில்லை.

நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூருடன் தனது ஏகே61 படத்திற்காக இணைந்துள்ளார். இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் கடந்த சில வாரங்களாக நடந்து முடிந்துள்ளது.

பேங்க் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், படத்தின் வில்லனாகவும் ஹீரோவாகவும் இரண்டு வேடங்களில் இந்தப் படத்தில் அஜித் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு கெட்டப்பில், நீண்ட தாடியுடன், கூலர்ஸ், காதில் கடுக்கன் சகிதம் அஜித் காணப்படுகிறார்.இதன் இரண்டாவது கெட்டப்பை ரகசியமாக வைக்க படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், பூனாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல்வாரத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்த நிலையில், இடையில் சிறிது கேப் எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் அஜித்.

துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியிலும் அஜித் கலந்துக் கொண்டார். இதில் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை அவரது டீம் வெற்றிக் கண்டுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக மீண்டும் ஏகே61 படத்தின் சூட்டிங்கில் சில தினங்களில் கலந்துக் கொள்கிறார்

முன்னதாக இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், படத்தின் சூட்டிங் முதல் வாரத்தில் துவங்கவுள்ளதால் பர்ஸ்ட் லுக் வெளியீடு மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No posts to display