Friday, April 19, 2024 4:10 am

உண்மையிலேயே வாழ்நாள் முழுவதும் இதய நோய், சிறுநீரக பிரச்சினை வராமல் இருக்கணுமா ? இத சாப்பிடுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தினமும் ஒரு வாழைப்பழத்தை உணவில் எடுத்துக்கொள்வதால் பலவிதமான நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. வாழைப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

இது உங்கள் உடலை செல் மற்றும் திசு சேதத்திலிருந்து பாதுகாக்கிறது 7000-ம் ஆண்டுகளுக்கு முன் முதன்முதலாகப் பயிரிடப்பட்டு, உலகில் மிக அதிகமாக பயிரிடப்படும் பழமாகவும் கோதுமை, நெல், சோளம் இவற்றிற்குப் பிறகு நான்காவதாக மிக அதிகமாக பயிரிடப்படும் விளைபொருளாகவும் உள்ளது.

இந்த சத்தான பழம் உலகின் அனைத்து இடங்களிலும் நம் சாப்பாடு தட்டில் இடம் பிடித்துவிட்டது.வாழைப்பழம் மிக எளிதாக கிடைப்பதால் உலகில் மிக அதிகமாக சாப்பிடும் பழமாக உள்ளது.

வாழைப்பழத்தில் பொதிந்திருக்கும் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு தேவையானது.

உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பல வகையான வாழைப்பழங்களில், மையத்தில் வழங்கப்படும் பொதுவான சில வகைகள் இங்கே…

கிராண்ட் நைன்
கர்பூரவள்ளி
நேந்திரன்
பச்சநதன்
பூவன்
செவ்வாழைப்பழம்
ரஸ்தாலி
ரோபஸ்டா
மலை வாழைப்பழம்

உங்களுக்கு வாழைப்பழத்தின் சுவை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அவை உங்களை சந்தோஷமாக வைத்திருக்கும். வெளிச்சூழ்நிலை விஷயங்களான நம் உணவு பழக்கம், மூளையின் வேதியியலில் தாக்கம் உண்டாக்கி, மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் உணர்வுகளை உருவாக்குகிறது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாழைப்பழமானது நோய் எதிர்ப்பு அமைப்பு வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் பெரிய வித்தியாசத்தை தருகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கம் ஏற்படுத்தும் குடல் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா) உருவாக உறுதுணையாகிறது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் தினசரி உட்கொள்ள வேண்டிய 11 ஊட்டச்சத்துகளில் 5 உள்ளது.

ஓர் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான மேலும் நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் வழங்குகிறது.

மேலும், தினசரி அளவில் தேவையான 11 சதவிகிதம் வைட்டமின் சி சத்தை ஒரு வாழைப்பழம் கொடுக்க முடியும்.

இது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் உற்பத்தி செய்ய அவசியமானது. உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பழுத்த வாழைப்பழங்களை நாடுங்கள். பொட்டாசியம் நம் உடலில் நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள செல்களுக்கு தேவையான மினரல் கனிம எலெக்ட்ரோலைட் ஆகும்.

ரத்த அழுத்தத்தை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றும் இதய செயல்பாடு, திரவ சமநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

பொட்டாசியம் குறைபாடு உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் உட்பட தீவிரமான உடல் கோளாறு ஏற்பட காரணமாகிறது.

மேலும் சில ஆய்வுகளில், பொட்டாசியம் நிறைந்த உணவு ரத்த ஓட்டத்தில் சோடியம் அளவை கட்டுப்படுத்துதல் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

பொட்டாசியம் சத்தைப் பெறுவதற்கு வாழைப்பழம் ஓர் மிகச்சிறந்த இயற்கையான மூலம்.

ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் தினசரி உட்கொள்ள தேவையான பொட்டாசியத்தில் 12 சதவிகித அளவைக் கொண்டுள்ளது. வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்து உள்ளது. இது தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

அதேப்போல், இரும்பு சத்து மாதவிலக்கு நோய் அறிகுறி சார்ந்த பிரச்சனையை எதிர்க்க உதவும். பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம்.

உடலுக்கு பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம். கொஞ்சம் வாழைப்பழங்களை உண்பதால் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் அளவை திறன்பட சமன்செய்ய முடியும்.

பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் B6 சிவப்பு ரத்த அணுக்களை தயாரிக்கிறது, இது மாதவிடாய் காலங்களில் உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு சராசரி அளவிலான வாழைப்பழத்தில் 12மி.கி. கோலைன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வைட்டமின் பி வகையைச் சேர்ந்த கோலைன், உடலில் கொழுப்பை சேமித்து வைக்கும் மரபணு மூலக்கூறுகளில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டது.

நீண்ட தூரம் ஓடுபவர்கள் (மாரத்தான்) மற்றும் இதர உயர் சகிப்புத்தன்மை கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். ஏனெனில், அதில் நல்ல மாவுச்சத்து உள்ளது.

மேலும் அதிக அளவில் குளுக்கோஸ் உள்ளது. எளிதாக ஜீரணமாகக்கூடிய சர்க்கரை, உடலுக்கு தேவையான சக்தியை நேரடியாக கொடுக்கும்.

நம் உடலில் செல்கள் கொழுப்பை கிரகித்துகொள்வதைக் குறைக்கக்கூடிய பெக்டின் என்ற சத்தின் நேரடி மூலமாக வாழைப்பழங்கள் உள்ளன.

ஆரோக்கியமான எலும்புகளைப் பற்றி யோசிக்கும்போது, மனதுக்கு வரும் முதல் விஷயம் கால்சியம் சத்து.

வாழைப்பழங்களில் உள்ள சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் குடலில் வாழ்ந்து உடலில் கிரகித்துக்கொள்ள வேண்டிய கால்சியம் சத்தின் அளவை மேம்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து நம் எலும்புகளுக்கு நல்லது. அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவை உட்கொள்ளும் மக்களுக்கு ஒட்டுமொத்த எலும்பு அடர்த்தி அதிகம் இருக்கும். பழம் வாழைப்பழங்கள் கிட்டத்தட்ட உலகின் அனைத்து சந்தைகளிலும் மலிவான விலையில் கிடைக்கும்.

வாழைப்பழத்தின் கனத்தத் தோல், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேறு சில பாதிப்பு தரும் ரசாயனங்கள், மென்மையான மற்றும் சுவையான உள் சதைப்பற்றை மாசுபடாமல் காக்கிறது.

மேலும் பல இடங்களுக்கு எளிதாக எடுத்துச்சென்று சேர்க்க முடிகிறது. சுலபமாக கிடைக்கும் தன்மையும், பல்வேறு பலன் தரும் பழமாக இருப்பதும் இணைந்து இதை ஓர் மிகச்சிறந்த சிற்றுண்டியாக்குகிறது. தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட்டுவந்தால் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

இதைத் தவிர பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

பழுத்த வாழைப்பழம் கொண்டுள்ள சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்டுகள் சர்க்கரை நோய், இதய நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளையும் கூடத் தடுக்கும்.

தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.செவ்வாழை பழம் சாப்பிடுவதால் கல்லீரல் வீக்கம், சிறுநீரக பிரச்சனையை சரி செய்கிறது. இந்த செவ்வாழை பழத்தினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி நோயானது விரைவில் குணமாகும்.

அதிக உடல் எடை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பழத்தினை தாராளமாக உண்ணலாம்.செவ்வாழை பழத்தில் அதிக வைட்டமின் சத்துக்கள் இருப்பதால் கண்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கிறது.

இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகம் இருப்பதால் செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்கும். நாம் தினமும் 1 செவ்வாழை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அது மட்டுமல்லாமல் ஆண்களுக்கு உயிர் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பெண்கள் அதிகமாக செவ்வாழை எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் பிரச்சனையானது சீராக இருக்கும். பூவன் வாழைப்பழமானது எளிமையாக அனைத்து இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்று. இந்த பூவன் பழமானது செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

பூவன் வாழைப்பழத்தினை உணவிற்கு பிறகு தினமும் 1 பழம் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம்.

மேலும் மூல நோய் உள்ளவர்கள் இந்த பழத்தினை எடுத்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது.ரஸ்தாளி வாழைப்பழமானது அதிகம் சுவை கொண்டவை. கண்களில் ஏற்படும் அனைத்து வித நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

இந்த ரஸ்தாளி பழம் மேலும் இந்த பழம் சாப்பிடுவதால் உடல் நன்கு வலுவுடன் தென்படும்.

இதயம் சம்மந்த நோய் உள்ளவர்கள் இந்த ரஸ்தாளி வாழைப்பழத்தினை சாப்பிட்டு வர இதய நோய் அனைத்தும் குணமாகும்.உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் இந்த பேயன் வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள வெப்பத்தன்மை நீங்கி உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

தொடர் வயிற்று வலி மற்றும் குடல் புண் உள்ளவர்கள் தினமும் 1 பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றுதான் இந்த பச்சை வாழைப்பழம். கோடை கால நேரத்தில் நம் உடலானது மிகவும் வெப்ப தன்மை அதிகமாக இருக்கும்.

அந்த நேரத்தில் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் சூடு நீங்கி உடலானது குளிர்ச்சி தன்மையாக இருக்கும்.

உடலில் இரத்தம் சம்பந்த அனைத்து நோய்களையும் சரி செய்கிறது இந்த வாழைப்பழம். குறிப்பாக வாதம் நோய் உள்ளவர்கள் இந்த பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதை குறைத்து கொள்வது நல்லது. கற்பூரவள்ளி வாழைப்பழம் சாப்பிடுவதால் கண்களில் இருக்கும் சூட்டை தனித்து கண்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

இந்த கற்பூரவள்ளி வாழைப்பழமானது மிகவும் இனிப்பு சுவை கொண்டது. இந்த பழமானது ஜீரண கோளாறுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

நேந்திர வாழைப்பழமானது நமது உடலிற்கு அதிக இரும்புச்சத்தை கொடுக்கக்கூடிய அற்புதமான பழ வகையாகும்.

நேந்திர வாழைப்பழத்தை நாம் பச்சையாகவும், அல்லது அவியல் செய்தோ, சிப்ஸ் முறையிலும் கூட இந்த பழத்தினை சாப்பிட்டு வரலாம்.

மேலும் இந்த நேந்திர வாழைப்பழத்தில் அதிகம் புரதச்சத்து உள்ளது.

நேந்திர வாழைப்பழத்தினை சாப்பிட்டு வருவதால் வயிற்று பகுதிகளில் உள்ள குடற்புழுக்களை நீக்கி விடும்.மொந்தன் வாழைப்பழம் சாப்பிட்டுவர உடலில் அதிகமாக இருக்கும் வறட்சி தன்மை நீங்கிவிடும். மேலும் மஞ்சள் காமாலை போன்ற நோய்களையும் வராமல் தடுத்து நிறுத்தும்.

உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

கதலி வாழைப்பழத்தில் அதிகமாக ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது.

இதனால் நம்முடைய செல்களின் செயல்பாட்டு திறனை சீராக வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்