தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமான நடிகர், மக்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் மரியாதையும் தற்போது வரை கொண்டுள்ள நடிகர் என்றால் உடனே இவர் பெயரை சொல்லிவிடலாம். அவர்தான் கேப்டன் விஜயகாந்த்.
இவருடன் பழகியவர்கள், பார்த்தவர்கள், கேள்விப்பட்டவர்கள் என அனைவரும் இவரை பற்றி சிலாகிக்காமல் இவரை பாராட்டாமல் இருந்ததில்லை. அது இவரை எதிர்த்து நின்று போட்டியிட்ட எதிராளியாக இருந்தாலும் சரி இவரை நல்ல விதமாகத்தான் கூறுவார்கள்.
அப்படித்தான் இவரின் தைரியமான குணத்தை பற்றி அஜித்தின் ராசி பட இயக்குனர் முரளி அபாஸ் ஒரு நேர்காணலில் விஜயகாந்த் பற்றி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,’ உண்மையில் விஜயகாந்த், அஜித்தின் இன்னொரு வெர்ஷன் (வடிவம்) இரண்டு பேருமே திரையில் மட்டுமே வேஷத்துடன் இருப்பவர்கள். வெளியில் அந்த வேஷத்தை கலைத்துவிட்டு இருக்கத்தான் நினைப்பார்கள். அதிலும், விஜயகாந்த் தனது வேஷத்தை கலைத்து விட்டு அநியாயங்களுக்கு குரல் கொடுக்க நினைப்பார். யாராக இருந்தாலும் சண்டை போட தயங்க மாட்டார். அவ்வளவு தைரியமான மனிதர்.’
இவ்வாறு கேப்டன் விஜயகாந்த் பற்றி இயக்குனர் முரளி அபாஸ் அந்த நேர்காணலில் குறிப்பிட்டு இருந்தார். உண்மையில், கேப்டன் விஜயகாந்த் மிகவும் தைரியசாலி என்பதை பல இடங்களில் அவர் நிரூபித்துள்ளார். அதேபோல் அவருடன் பழகியவர்கள் பலரும் கூறியுள்ளனர்.