Wednesday, March 29, 2023

துப்பாக்கிச் சுடுதலில் 6 பதக்கங்களை அள்ளி குவித்த அஜித் !! வைரலாகும் புகைப்படம்

Date:

தொடர்புடைய கதைகள்

உண்மையிலேயே லாங் பைக் ரைடுகளை மிஸ் பண்ணுகிறேன் கவுதம்...

நடிகர் கௌதம் கார்த்திக் தனது ‘பாத்து தலை’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்,...

ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கு கலக்குன்னு கலக்கிய திரைப்படத்தில் ...

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துனிவு படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற...

சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சுவாரஸ்யமான படங்களில் ஒன்றாக மாறி வரும்...

லால் சலாம் படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இதோ...

எப்ஐஆர், கட்டா குஸ்தி வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் தற்போது தனது...

யாரும் இதுவரை பார்க்காத அஜித் நடித்த வேஷ்டி விளம்பரம்...

தமிழ் நடிகர் அஜித் குமாரின் தந்தை பி.எஸ்.மணி மார்ச் 24 அன்று...

சமீபத்தில் திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் பங்கேற்றார். நடிகர் அஜித்குமார் திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்பு வைரலாக பரவியது. தற்போது, ​​47வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அஜித் ஆறு பதக்கங்களை வென்றுள்ளார் என்பது லேட்டஸ்ட் அப்டேட்

இதையடுத்து ட்விட்டரில் ‘வெற்றி நாயகன் அஜித்’ என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

47-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 25-ம் தேதி திருச்சி கே.கே.நகரில் உள்ள ரைபிள் கிளப்பில் தொடங்கியது. பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து 1,300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். பிஸ்டல் துப்பாக்கிச் சுடுவதற்கான போட்டிகள் 28-ம் தேதி நடைபெற்றது.

ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 16, 19, 21 ஆகிய வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 21 முதல் 45 வயது, 45 முதல் 60 வயது மற்றும் 60 வயதுக்கு மேல் உள்ள பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித் அடிப்படையில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆர்வம் மிக்கவர் என்பதால், அவர் கடந்த 27-ம் தேதி துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்திருந்தார். அவரைக்காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அன்று இரவு அவர் ரசிகர்களை சந்திக்கும் வீடியோ வைரலாக பரவியது. இந்நிலையில், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் உள்ளிட்ட பிரிவுகளில் 4 தங்கம், 2 வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது அஜித் அணி. வெற்றி பெற்றவர்களுக்கு நாளை பரிசு வழங்கப்படுகிறது. இதையடுத்து ட்விட்டரில் ‘வெற்றிநாயகன்அஜித்’ என ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

எச் வினோத் இயக்கிய ‘அஜித் 61’ படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அஜித் தயாராகி வருகிறார், மேலும் இறுதி அட்டவணை விரைவில் புனேவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் முக்கிய பகுதிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதால், அஜித் மற்றும் படத்தின் மற்ற முக்கிய நட்சத்திரங்கள் அட்டவணையில் இணைகிறார்கள்.

சமீபத்திய கதைகள்