கலக்கிட்டீங்க விக்கி !! விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித் !!

0
கலக்கிட்டீங்க விக்கி !! விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித் !!

பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரு உள்விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இடம்பெற்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி உள்ளிட்ட செயல்பாடுகளை திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் மேற்கொண்டார்.

இந்நிலையில், இந்த விழாவிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலை நிகழ்ச்சிகள், மேடை அமைப்பு உள்ளிட்டவற்றை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழரின் வரலாற்று பெருமையை உலகம் அறிந்து கொள்ளும் வகையில் தயார் செய்ததாக தெரிவித்தார்.

அரங்கினுள் ஒளிபரப்பப்பட்ட காணொளிக்கான பின்னணி குரலை நடிகர் கமலஹாசன் கொடுத்ததாகவும், அதற்கு அவருடைய குரல் தான் மிகச் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து கமலஹாசனை பின்னணி குரல் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தரைதளத்தில் அமைக்கப்பட்டிருந்த 3டி தொழில்நுட்ப திரை பற்றி பேசிய விக்னேஷ் சிவன், இது இந்தியாவில் இதுவரை யாரும் பயன்படுத்தாத தொழில்நுட்பம் எனவும், துபாய் போன்ற வெளிநாடுகளில் பயன்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பத்தை நன்கு அறிந்து கொண்டு அதனை பயன்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.

அஜித் படத்திற்கு ஒகே வாங்கிய பின் தான் எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தது எனவும் அதுமட்டுமில்லாமல் அஜித் கலக்கிட்டீங்க விக்கி என பாராட்டினார் என்றும் பிரபல நிறுவனத்திற்கு பேட்டி மூலம் விக்கி கூறினார் இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது !!

No posts to display