47வது மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அஜித் சமீபத்தில் திருச்சி ரைபிள் கிளப்புக்கு சென்றது பேசப்பட்டது. மேலும் கிளப்பில் இருந்து நடிகரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அஜித் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரத்தைப் பார்க்க திருச்சி ரைபிள் கிளப்பை நோக்கி குவிந்தனர்.
நடிகர் அஜித் தமிழ் கொண்டாடும் பிரபலம். சினிமாவில் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்.அஜித் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இருக்கிறார் என்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அவ்வப்போது அவர் பயிற்சி பெற செல்லும் இடங்களிலும் இருந்து அவரின் புகைப்படம் வந்துவிடும்.
அப்படி அண்மையில் அவர் திருச்சி துப்பாக்கி சுடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் கூடியுள்ளது. எவ்வளவு கூட்டம் இருந்தது என்பது வீடியோக்கள் மூலம் நாமே பார்த்தோம்.
ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலானது. DC ஸ்ரீதேவி அவர்கள் அன்று நடந்த விஷயம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், அஜித் அவர்களிடம் ரசிகர்களை சந்திப்பது கேட்டபோது, ரசிகர்களுக்கு பிரச்சனை வரக்கூடாது, நீங்கள் என்ன கூறினாலும் அதை செய்கிறேன் என சார் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
கடைசியாக நன்றி கூறிய அவர் எனக்கு மட்டும் இல்லாமல் கான்ஸ்டபிள் வரைக்கும் சொன்னார். உண்மையிலேயே அவர் ஒரு நைஸ் ஜென்டில்மேன் என கூறியுள்ளார்.
அடுத்த சில நாட்களுக்கு படப்பிடிப்பு போட்டி நடைபெறுவதால் அஜித் மீண்டும் திருச்சி ரைபிள் கிளப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் கிளப்புக்கு வெளியே அதிக ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
எச் வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க உள்ளார்.